Tag: தலைமை தகவல் ஆணையர்

இந்திய அரசியல்

விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் (VBSA) மசோதா, 2025 உயர்கல்விக்கான ஒரு ஆணையமும் அதனுடன் மூன்று கவுன்சில்களும் அமைக்கப்பட வேண்டும் என இந்த மசோதா முன்மொழிகிறது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA), 2005-ஐ மாற்றுவதற்காக மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ‘விக்சித் பாரத் @2047’ என்ற தேசியக் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை நிறுவுதல்" இதன் நோக்கமாகும். இந்த நடவடிக்கை, "தேவை சார்ந்த கட்டமைப்பிலிருந்து" (Demand-driven framework)  "வழங்கல் சார்ந்த திட்டத்திற்கு" (Supply-driven scheme)  மாறுவதைக் குறிக்கிறது VB-G RAM G மசோதா உறுதி செய்யப்பட்ட வேலை நாட்களின் எண்ணிக்கையை 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்துகிறது. நிதி பங்கு: மாநிலங்கள் – 40%, மத்திய அரசு – 60%. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA), 2005 – குறித்து 2005 ஆம் ஆண்டு ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.  இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு நிதியாண்டிலும் 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்வதாகும். பயனாளிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்க வேண்டும். நிதி பங்கு: மாநிலங்கள் – 10%, மத்திய அரசு – 90%. MGNREGA திட்டத்தின் கீழ், தொழிலாளர்களின் கூலியை 100% மத்திய அரசு வழங்கி வந்ததுடன், பொருட் செலவின் 75%-ஐயும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. SHANTI (Sustainable Harnessing and Advancement of Nuclear energy for Transforming India) மசோதா அணு மின்சார உற்பத்தியில் இந்திய மற்றும் வெளிநாட்டு தனியார் துறைகளின் பங்கேற்பை ஊக்குவிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். இதற்காக, இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள அணு ஆற்றல் சட்டம் 1962 மற்றும் அணு சேதத்திற்கு குடிமை பொறுப்பு சட்டம் (CLND) 2010 ஆகியவற்றை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்த மசோதா கொண்டுள்ளது. 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை குறைப்பது (net zero carbon emission) உள்ளிட்ட இந்தியாவின் நீண்டகால ஆற்றல் மற்றும் காலநிலை இலக்குகளை அடைய இந்த மசோதா உதவுகிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் 100GW அணு மின்சார உற்பத்தி திறனை அடைவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தலைமை தகவல் ஆணையர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ராஜ்குமார் கோயலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் மத்திய தகவல் ஆணையம் பற்றிய தகவல்கள் மத்திய தகவல் ஆணையம் என்பது 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் 3 பேர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர்யால் நியமிக்கப்படுகிறார்…