முன்முயற்சிகள்/ திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் பின்னணி : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதி களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதிகளில் சந்தைப் படுத்துவதற்காக பல்வேறு ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-ம் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற் றுக்கிழமைகளில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள் அடங்கிய இயற்கை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் பற்றி தமிழ்நாடு அரசால் 1983-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஒரு சட்டரீதியான அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டு,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுகிறது. நோக்கம்: கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சுயசார்பு ஆகியவற்றின் மூலம் பெண்களின் நிலையை உயர்த்துதல். பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் வாயிலாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், சுயஉதவிக் குழு (SHG) இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் தற்போது பின்வரும் முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM). தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (TNULM). தீன் தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் (DDU-GKY). மகளிர் திட்டம் (பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்).

