ஞான பாரதம் இயக்கம் பின்னணி: இந்தியாவின் கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்யவும், ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், டிஜிட்டல் மயமாக்கவும் மற்றும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் கலாச்சார அமைச்சகம் 'ஞான பாரதம் இயக்கம்'-ஐத் தொடங்கியுள்ளது. இந்த மிஷன் நாடு முழுவதும் கிளஸ்டர் மையங்கள் (CC – Cluster Centers) மற்றும் சுதந்திர மையங்கள் (IC – Independent Centers) அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட CC மற்றும் IC மையங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த நோடல் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக (Nodal Coordinating Authorities) இணைந்துள்ளன. மெட்டாடேட்டா உருவாக்கம் (Metadata creation), உபகரணங்கள் நிறுவுதல், செயற்கை நுண்ணறிவு தளம் (Artificial Intelligence – AI) மற்றும் நீண்டகால தரவு சேமிப்பு ஆகியவற்றிற்கு தொழில்நுட்ப கூட்டாளர்கள் ஆதரவளிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் உள்ள சுமார் 1 கோடி கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்து டிஜிட்டல் மயமாக்குவது இலக்கு. டிஜிட்டல் செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் தேசிய டிஜிட்டல் களஞ்சியம் (NDR – National Digital Repository) மூலம் மையப்படுத்தப்பட்ட அணுகலுடன் சேமிக்கப்படும். இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI – National Archives of India) வரலாற்று பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தரவின் நம்பகத்தன்மை மற்றும் மாற்றமின்மை உறுதிப்படுத்த செக்சம் சரிபார்ப்பு (Checksum verification) முறை பயன்படுத்தப்படுகிறது.

