Tag: சிறுதானியம் மூலம் 520 வகை உணவுகள்

தமிழ்நாடு

சிறுதானியம் மூலம் 520 வகை உணவுகள் 'சிறுதானியங்களின் சங்கமம்-2023' என்ற நிகழ்ச்சி போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. தமிழக உணவு பாதுகாப்புத்துறையுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில், 11 சிறுதானியங்களை கொண்டு தயாரித்த 520 வகையான சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது. அதற்கு உலக சாதனை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. மத்திய அரசு நடத்திய உணவு பாதுகாப்பு தொடர்பான போட்டியில் நாடு முழுவதும் 260 மாவட்டங்கள் பங்கேற்றன. சிறந்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட 31 மாவட்டங்களில், 13 மாவட்டங்கள் தமிழகத்தை சேர்ந்தவை. நாட்டிலேயே முதன்மை மாவட்டமாக கோவை தேர்ந்தெடுக்கப்பட்டது.