Tag: சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) வருடாந்திர நிலக்கரி சந்தை அறிக்கை 2023

பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப் போக்குவரத்து- (LEADS) அறிக்கை 2023 மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் புதுதில்லியில் "பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப் போக்குவரத்து (“Logistics Ease Across Different State - LEADS - லீட்ஸ்) 2023" அறிக்கையின் 5வது பதிப்பை வெளியிட்டார். LEADS அறிக்கை, 2018-ஆம் ஆண்டில் உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டுக்கு இணங்க உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கை 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023 மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சரக்குப் போக்குவரத்தைக் கையாள்வதில் சாதனை படைத்தன. சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) வருடாந்திர நிலக்கரி சந்தை அறிக்கை 2023 இந்த அறிக்கையின்படி உலக நிலக்கரி தேவை 2026க்குள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் குறைந்து வரும்  தேவையை நோக்கிய மாற்றம் காரணமாக இந்த சரிவு எதிர்பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டு வரை எரிபொருளுக்கான "உந்து சக்தியாக" இந்தியா இருக்கும். நிலக்கரிக்கான உலகளாவிய தேவை 2023 இல் 1.4% அதிகரித்து, முதல் முறையாக 8.5 பில்லியன் டன்களைத் தாண்டியது.