பொருளாதாரம்

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப் போக்குவரத்து- (LEADS) அறிக்கை 2023

  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் புதுதில்லியில் “பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப் போக்குவரத்து (“Logistics Ease Across Different State – LEADS – லீட்ஸ்) 2023” அறிக்கையின் 5வது பதிப்பை வெளியிட்டார்.
  • LEADS அறிக்கை, 2018-ஆம் ஆண்டில் உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டுக்கு இணங்க உருவாக்கப்பட்டது.
  • இந்த அறிக்கை 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023 மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
  • தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சரக்குப் போக்குவரத்தைக் கையாள்வதில் சாதனை படைத்தன.

சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) வருடாந்திர நிலக்கரி சந்தை அறிக்கை 2023

  • இந்த அறிக்கையின்படி உலக நிலக்கரி தேவை 2026க்குள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சீனாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் குறைந்து வரும்  தேவையை நோக்கிய மாற்றம் காரணமாக இந்த சரிவு எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2026ம் ஆண்டு வரை எரிபொருளுக்கான “உந்து சக்தியாக” இந்தியா இருக்கும்.
  • நிலக்கரிக்கான உலகளாவிய தேவை 2023 இல் 1.4% அதிகரித்து, முதல் முறையாக 8.5 பில்லியன் டன்களைத் தாண்டியது.
Next Current Affairs பொருளாதாரம் >