Tag: சர்வதேச அருங்காட்சியக தினம்

முக்கிய தினங்கள்

சர்வதேச அருங்காட்சியக தினம்  சர்வதேச அருங்காட்சியக தினம் 2026, மே 18 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டின் மையக்கருத்து: "பிரிந்திருக்கும் உலகை ஒன்றிணைக்கும் அருங்காட்சியகங்கள்" (Museums Uniting a Divided World) என்பதாகும். சிக்கிம் 51-ஆம் ஆண்டு மாநில தினம் சிக்கிமின் 51-ஆம் ஆண்டு மாநில தினம் மே 16-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. மன்னராட்சியில் இருந்த சிக்கிம். கடந்த 1975, மே 16-ஆம் தேதி இந்தியாவின் முழு மாநிலமாக இணைந்தது.  35-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1974-இல் சிக்கிமிற்கு "இணைந்த மாநிலம்" (Associate State) என்ற தனித்துவமான அந்தஸ்தை வழங்கியது. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பு வகையாகும். 36-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 16 மே 1975 அன்று சிக்கிமை இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக அதிகாரப்பூர்வமாக மாற்றியது. சிக்கிமின் கலாச்சார அடையாளம், சட்டங்கள் மற்றும் நில உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அரசியலமைப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்காகப் சரத்து  371F சேர்க்கப்பட்டது. 2016-ல் 76,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தை இரசாயனமற்ற விவசாயமாக மாற்றி, சிக்கிம் உலகின் முதல் 100% இயற்கை விவசாய மாநிலமாக ஆனது.