Tag: சம்பன் (SAMPANN)

தேசிய திட்டங்கள்

சம்பன் (SAMPANN) இது தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த ஆன்லைன் ஓய்வூதிய மேலாண்மை அமைப்பாகும். இது ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஓய்வூதியத்தைச் செயலாக்குதல், அனுமதித்தல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றை ஒரே தளத்தில் எளிதாக்குகிறது. வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (டிஎல்ஐ - DLI) திட்டம் செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, நிதி ஊக்கத்தொகைகளுடன் மேம்பட்ட வடிவமைப்பு உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் வலுவான, தற்சார்பு சிப் வடிவமைப்பு சூழல் ஊக்குவிக்கப்படும்.  இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM)  2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்மிஷன், இந்தியாவை உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக உருவாக்குவதையும், செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க நோக்கமாகக் கொண்டது. இதனை மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) செயற்படுத்துகிறது