Tag: சமீபத்திய பொருளாதாரப் போக்குகள்

பொருளாதாரம்

சமீபத்திய பொருளாதாரப் போக்குகள் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியடைந்துள்ளது  2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் காலம்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) 7.8% வளர்ச்சியடைந்துள்ளது விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடித்துறையில் GVA 3.5% துறையில் வளர்ச்சியடைந்துள்ளது  நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் துறையில் GVA 12.2% வளர்ச்சியடைந்துள்ளது வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகளில் GVA 9.2% உயர்ந்துள்ளது. பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு தீவிர கட்டுமானத் துறையின் GVA தலா 7.9% உயர்ந்துள்ளது. GDP மற்றும் GVA பற்றி GDP மற்றும் GVA ஆகியவை நாட்டின் பொருளாதார செயல்திறனைக் கண்டறியும் இரண்டு முக்கிய வழிகளாகும். GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து "இறுதிநிலை” பொருட்கள் மற்றும் சேவைகளின் பண அளவை அளவிடுகிறது. GVA தேசிய வருமானத்தை வழங்கல் பக்கத்திலிருந்து கணக்கிடுகிறது.