பொருளாதாரம்

சமீபத்திய பொருளாதாரப் போக்குகள்

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியடைந்துள்ளது 

  • 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் காலம்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் மொத்த மதிப்பு கூட்டல் (GVA) 7.8% வளர்ச்சியடைந்துள்ளது
  • விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடித்துறையில் GVA 3.5% துறையில் வளர்ச்சியடைந்துள்ளது 
  • நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்முறை சேவைகள் துறையில் GVA 12.2% வளர்ச்சியடைந்துள்ளது
  • வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகளில் GVA 9.2% உயர்ந்துள்ளது.
  • பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு தீவிர கட்டுமானத் துறையின் GVA தலா 7.9% உயர்ந்துள்ளது.

GDP மற்றும் GVA பற்றி

  • GDP மற்றும் GVA ஆகியவை நாட்டின் பொருளாதார செயல்திறனைக் கண்டறியும் இரண்டு முக்கிய வழிகளாகும்.
  • GDP என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து “இறுதிநிலை” பொருட்கள் மற்றும் சேவைகளின் பண அளவை அளவிடுகிறது.
  • GVA தேசிய வருமானத்தை வழங்கல் பக்கத்திலிருந்து கணக்கிடுகிறது.
Next பொருளாதாரம் >