கூட்டுறவுச் சங்க - வரலாறு கூட்டுறவு இயக்கமானது உலக அளவில் 19ஆம் நூற்றாண்டின் இடையே தோன்றி வளர்ச்சி பெற்றுவந்த நிலையில்,இந்தியாவில் அதற்கான விதை அந்நூற்றாண்டின் இறுதியில் ஊன்றப்பட்டது. தமிழ்நாட்டில்தான் அதன் வரலாறு தொடங்கியது. மிராசுதாரர்களையும் வட்டிக்குக் கடன் கொடுப்போரையும் விவசாயிகள் சார்ந்திருந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்கள், விவசாயிகளைக் கடனாளி ஆக்கின. 1875இல் ஏற்பட்ட தக்காணக் கலகத்துக்கு, விவசாயிகளின் கடன் பிரச்சினையும் ஒரு முக்கியக் காரணம், இதைத் தொடர்ந்து, தக்காண விவசாயிகள் துயர்நீக்கச் சட்டம் (1875), விவசாயிகள் கடன் சட்டம் (1884) ஆகிய சட்டங்களை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது. இந்நிலையில் மேலைநாடுகளில் இயங்கும் விவசாயக் கடன் சங்கங்கள் போன்ற அமைப்புகளை இந்தியாவிலும் ஏற்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு சர் பிரடெரிக் அகஸ்டஸ் நிக்கல்சன் என்னும் அதிகாரியை அன்றைய சென்னை மாகாண அரசு நியமித்தது. நிக்கல்சன் தனது அறிக்கையை இரண்டு பெரிய தொகுதிகளாக 1895, 1897ஆம் ஆண்டுகளில் அளித்தார். ஜெர்மனியில் இயங்கிய ராய்பீசன் சங்கங்களைப் போன்ற அமைப்புகளை விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் பொருட்டு நிறுவலாம் என்று அவர் பரிந்துரைத்தார். 1901 பஞ்ச ஆணையமும் இதே பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இவற்றின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசு, கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், 1904ஐ நிறைவேற்றியது. இவற்றில் உள்ள போதாமைகளைக் களைந்து 1912இல் இச்சட்டம் திருத்தப்பட்டது. இந்தியாவில் கூட்டுறவுச் சங்கம் இந்தியாவிலேயே முதல் கூட்டுறவுச் சங்கம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரூர் கிராமத்தில், 30.08.1904 அன்று திரூர் கிராமக் கூட்டுறவுச் சங்கம் பதிவுசெய்யப்பட்டது. வருவாய்த் துறை துணை ஆணையராக ஓய்வு பெற்றிருந்த திரூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாராயணய்யாவின் முயற்சியாலும், சென்னை மாகாணக் கூட்டுறவுச் சங்கங்களின் முதல் பதிவாளருமான பி.ராஜகோபாலாச் சாரியாரின் முன்னெடுப்பாலும் இச்சங்கம் தொடங்கப்பட்டது. ராஜபாளையத்தில் 1925ஆம் ஆண்டு பூபதிராஜா கூட்டுறவு வங்கியைத் தொடங்கி அதன் தலைவராகவும் இருந்தவர்" பி.எஸ்.கே. என்றழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.குமாரசாமிராஜா, இவ்வங்கிக்கு காந்தியடிகளை 1934இல் அவர் அழைத்துவந்தார். 1925லேயே சென்னையில் இருந்த திருவல்லிக்கேணி கூட்டுறவுச் சங்கத்துக்கு காந்தி வருகை புரிந்துள்ளார். தென்னாப்ரிக்காவில் இருந்தபோது ஃபீனிக்ஸ் பண்ணை, டால்ஸ்டாய் பண்ணை உள்ளிட்டவற்றைத் தொடங்கி நடத்திய காந்திக்கு, கூட்டுறவின் மீது இயல்பாகவே ஆர்வமும் ஈடுபாடும் இருந்தன இந்திய கூட்டுறவு இயக்கம் வலுப்பட வேண்டுமென பெரிதும் விரும்பியவர். நேருதிராவிட இயக்கத்தின் பல்வேறு ஆளுன கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சி பங்களித்துள்ளனர், பிட்டி தியாகராயர், பிடிர ஏ.டி.பன்னீர்செல்வம், வே.வ.இராம ஊ.பு.அ.சௌந்தரபாண்டியன் ஆகி குறிப்பிடத்தக்கவர்கள். நீதிக்கட்சி என்.ஆர்.சாமியப்பா, தமிழ்நாட்டின் கூட்டுறவுப் பயிற்சிக் கழகத்தின் வளர்ச்சி துணைநின்றவர். அந்நிறுவனம் இன்னை அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டுவரு ஈரோடு நகர் வங்கியைத் தொடங்கியவர் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாது. பல்வேறு பின்தங்கிய சமூகங்களிடையே சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் கூட்டுறவுச் சங்கங்கள் பெரும்பணி ஆற்றியுள்ளன. சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்களை இந்தியாவிலேயே சிறப்பான முறையில் செயல்படும் தமிழ்நாட்டின் பொதுவிநியோகத் திட்டம் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது. தற்போது நியாயவிலைக் கடையின் அத்தியாவசியப் பொருட்களை முதியோர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வீட்டிலேயே சென்று…

