Tag: குறியீடுகள்

பொருளாதாரம்

குறியீடுகள் UNCATAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2023: வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (UNCTAD) ”உலக முதலீட்டு அறிக்கை 2023 (WIR 2023) : அனைவருக்கும் நிலையான ஆற்றலில் முதலீடு செய்தல்” ஆசியாவின் வளரும் நாடுகளில் அன்னிய நேரடி முதலீடு (FDI) USD 662 பில்லியனாக மாறாமல் உள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) ஆகியவை முறையே 10% மற்றும் 5% அதிகரிப்புடன் முதலிடத்தைப் பெற்றன. உலக அன்னிய நேரடி முதலீட்டில் 50%க்கும் மேலான பங்கை ஆசியா கொண்டுள்ளது. வளரும் நாடுகளில் அந்நிய நேரடிய முதலீட்டு அதிகரிப்பு சமமற்ற முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மேலும், வளர்ச்சியின் பெரும்பகுதி ஒரு சில பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் குவிந்துள்ளது. UNCTAD பற்றி UNCTAD என்பது உலக வர்த்தகத்தில் வளரும் நாடுகளின் நலன்களை ஊக்குவிக்கும்  அரசுகளுக்கிடையோன அமைப்பாகும். பொதுச் செயலர் – ரெபேகா கிரின்ஸ்பான் தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து