Tag: குனோ தேசிய பூங்கா முதல் இயற்கை காரணங்களுக்காக சிறுத்தைகளின் இறப்பு பற்றிய ஆரம்ப பகுப்பாய்வு

புவியியல்

சுற்றுச்சூழல் & சூழலியல் குனோ தேசிய பூங்கா முதல் இயற்கை காரணங்களுக்காக சிறுத்தைகளின் இறப்பு பற்றிய ஆரம்ப பகுப்பாய்வு: NTCA தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) அறிக்கையில், ஆப்பிரிக்க நாடுகளில் சிறுத்தைகள் மீண்டும் அறிமுகப்படுத்தியதன் ஆரம்ப கட்டம், அறிமுகப்படுத்தப்பட்ட சிறுத்தைகளில் 50% க்கும் அதிகமான இறப்புகள் நடந்ததாக உலகளாவிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. உயிரினங்களுக்குள் சண்டை, நோய்கள், இரையை வேட்டையாடும்போது ஏற்படும் காயம், வேட்டையாடுதல், சாலை விபத்துகள், விஷம் மற்றும் பிற வேட்டைகாரர்களின் கொள்ளையடிக்கும் தாக்குதல் போன்றவற்றால் இறப்பு ஏற்படலாம். NTCA இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சிறுத்தைகள் திட்டம் செயல்படுத்துவதற்கு இந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள் திட்டம் நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து மொத்தம் 20 ரேடியோ காலர் சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு (KNP) கொண்டு வரப்பட்டன. இது முதன்முதலில் கண்டம் விட்டு கண்டம் காடு இடமாற்றம் செய்யப்பட்ட திட்டம் ஆகும். சவால்கள் சிறுத்தைகளை நீண்ட காலமாக தனிமைப்படுத்தலில் வைத்திருப்பது அவற்றின் சூழல் தழுவல் திறன்களைப் பாதிக்கலாம் மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதனால் அவை மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. புலிகள் மற்றும் இந்திய சிறுத்தைகளைப் போலல்லாமல், இந்த சிறுத்தைகள் ஒப்பீட்டளவில் மென்மையான விலங்கு மற்றும் காடுகளில் ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். KNP இல் போதிய இடவசதி மற்றும் இரையின்மை. சிறுத்தை அதிக தூரம் ஓட கூடியவை என்பதால் பரந்த இடம் தேவை. சிறுத்தைகள் உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய பாலூட்டி. வறண்ட காடுகள், புதர்க்காடுகள் மற்றும் சவன்னாக்களின் வாழும் முக்கிய இனம் (முழு சுற்றுச்சூழல் அமைப்பை வரையறுக்க உதவும் உயிரினம்). CITES இன் இணைப்பு 1ன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. IUCN நிலை: ஆப்பிரிக்க சிறுத்தை – பாதிக்கப்படக்கூடிய நிலை ஆசிய சிறுத்தை – அழியும் நிலை