புவியியல்

சுற்றுச்சூழல் & சூழலியல்

குனோ தேசிய பூங்கா முதல் இயற்கை காரணங்களுக்காக சிறுத்தைகளின் இறப்பு பற்றிய ஆரம்ப பகுப்பாய்வு: NTCA

  • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) அறிக்கையில், ஆப்பிரிக்க நாடுகளில் சிறுத்தைகள் மீண்டும் அறிமுகப்படுத்தியதன் ஆரம்ப கட்டம், அறிமுகப்படுத்தப்பட்ட சிறுத்தைகளில் 50% க்கும் அதிகமான இறப்புகள் நடந்ததாக உலகளாவிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
  • உயிரினங்களுக்குள் சண்டை, நோய்கள், இரையை வேட்டையாடும்போது ஏற்படும் காயம், வேட்டையாடுதல், சாலை விபத்துகள், விஷம் மற்றும் பிற வேட்டைகாரர்களின் கொள்ளையடிக்கும் தாக்குதல் போன்றவற்றால் இறப்பு ஏற்படலாம்.

NTCA

  • இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சிறுத்தைகள் திட்டம் செயல்படுத்துவதற்கு இந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தைகள் திட்டம்

  • நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து மொத்தம் 20 ரேடியோ காலர் சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு (KNP) கொண்டு வரப்பட்டன. இது முதன்முதலில் கண்டம் விட்டு கண்டம் காடு இடமாற்றம் செய்யப்பட்ட திட்டம் ஆகும்.

சவால்கள்

  • சிறுத்தைகளை நீண்ட காலமாக தனிமைப்படுத்தலில் வைத்திருப்பது அவற்றின் சூழல் தழுவல் திறன்களைப் பாதிக்கலாம் மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தலாம். இதனால் அவை மிகவும் பாதிக்கப்படக்கூடியவை.
  • புலிகள் மற்றும் இந்திய சிறுத்தைகளைப் போலல்லாமல், இந்த சிறுத்தைகள் ஒப்பீட்டளவில் மென்மையான விலங்கு மற்றும் காடுகளில் ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்.
  • KNP இல் போதிய இடவசதி மற்றும் இரையின்மை.
  • சிறுத்தை அதிக தூரம் ஓட கூடியவை என்பதால் பரந்த இடம் தேவை.

சிறுத்தைகள்

  • உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய பாலூட்டி.
    • வறண்ட காடுகள், புதர்க்காடுகள் மற்றும் சவன்னாக்களின் வாழும் முக்கிய இனம் (முழு சுற்றுச்சூழல் அமைப்பை வரையறுக்க உதவும் உயிரினம்).
    • CITES இன் இணைப்பு 1ன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
  • IUCN நிலை:
    • ஆப்பிரிக்க சிறுத்தை – பாதிக்கப்படக்கூடிய நிலை
    • ஆசிய சிறுத்தை – அழியும் நிலை
Next புவியியல் >