Tag: ’கிரிப்டோகரன்சி’ வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர் விவரம் பெறுவது அவசியம்

பொருளதாரம்

பணம் மற்றும் வங்கி ’கிரிப்டோகரன்சி’ வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர் விவரம் பெறுவது அவசியம் ’கிரிப்டோகரன்சி’ எனப்படும் எண்ம, பண வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்கள் தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்களை (கேஒய்சி) பெறுவது  அவசியமாக்கப்பட்டுள்ளது. எண்ம பணப் பரிவர்த்தனைகள் மூலம் கருப்புப்பண பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ’கிர்ப்டோகரன்சி’ உள்ளிட்ட எண்ம பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தரகு அமைப்புகள் இனி கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் அமைப்புகளாகவும் செயல்பட வேண்டும்.  அதாவது சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் நடைபெறும்போது அது தொடர்பாக  வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய கண்காணிப்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ’கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை விவரத்தையும் 5 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.