Tag: காசநோய் தடுப்பு திட்டங்கள் தொடக்கம்

தினசரி தேசிய நிகழ்வுகள்

காசநோய் தடுப்பு திட்டங்கள் தொடக்கம் சர்வதேச காசநோய் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மார்ச் 24-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அதையொட்டி உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் சர்வதேச காசநோய் மாநாடு  நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, காசநோய் தடுப்பு திட்டங்களைத் தொடக்கி வைத்தார். காசநோய் இல்லா கிராம உள்ளாட்சிகள், குறுகியகால காச நோய் தடுப்பு சிகிச்சைத் திட்டம், குடும்பத்தை மையப்படுத்திய காசநோய் சிகிச்சை ஆகிய திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார். நடப்பாண்டுக்கான இந்தியா காசநோய் அறிக்கையையும் பிரதமர் மோடி வெளியிட்டார். சிறப்புத்திட்டம்:       காசநோயை ஒழிப்பதற்குத் தனிச்சிறப்புமிக்க திட்டத்தை இந்தியா செயல்படுத்தியது. 'காசநோய் ஒழிப்பு நண்பர்கள்' (நிக்ஷய் மித்ரா) என்ற அத்திட்டத்தின் மூலமாக காசநோயாளிகள் தத்தெடுக்கப்பட்டனர். விருதுகள் நீலகிரி மாவட்டத்துக்கு விருது காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மாநாட்டின்போது பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார்.                                                                                                                                                                                                           மாநில அளவிலான விருது கர்நாடகத்துக்கும் யூனியன் பிரதேச அளவிலான விருது ஜம்மு-காஷ்மீருக்கும், மாவட்ட அளவிலான விருதுகள் நீலகிரி, புல்வாமா, அனந்த்நாக் ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டன. இலக்கு                                                                                                                                                           சர்வதேச அளவில் 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு       நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆனால், காசநோயை 2025-ஆம்…