தினசரி தேசிய நிகழ்வுகள்

காசநோய் தடுப்பு திட்டங்கள் தொடக்கம்

  • சர்வதேச காசநோய் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் மார்ச் 24-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
  • அதையொட்டி உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் சர்வதேச காசநோய் மாநாடு  நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, காசநோய் தடுப்பு திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
  • காசநோய் இல்லா கிராம உள்ளாட்சிகள், குறுகியகால காச நோய் தடுப்பு சிகிச்சைத் திட்டம், குடும்பத்தை மையப்படுத்திய காசநோய் சிகிச்சை ஆகிய திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார். நடப்பாண்டுக்கான இந்தியா காசநோய் அறிக்கையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

சிறப்புத்திட்டம்:      

  • காசநோயை ஒழிப்பதற்குத் தனிச்சிறப்புமிக்க திட்டத்தை இந்தியா செயல்படுத்தியது. ‘காசநோய் ஒழிப்பு நண்பர்கள்’ (நிக்ஷய் மித்ரா) என்ற அத்திட்டத்தின் மூலமாக காசநோயாளிகள் தத்தெடுக்கப்பட்டனர்.

விருதுகள்

நீலகிரி மாவட்டத்துக்கு விருது

  • காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மாநாட்டின்போது பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார்.                                                                                                                                                                                                           மாநில அளவிலான விருது கர்நாடகத்துக்கும் யூனியன் பிரதேச அளவிலான விருது ஜம்மு-காஷ்மீருக்கும், மாவட்ட அளவிலான விருதுகள் நீலகிரி, புல்வாமா, அனந்த்நாக் ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டன.

இலக்கு                                                                                                                                                           சர்வதேச அளவில் 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு       நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஆனால், காசநோயை 2025-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க   இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

வாகன உற்பத்தியில் 3 வது இடம்                                                                                                                 

  • காஷ்மீரில் உள்ள லித்தியத்தை பயன்படுத்தி வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடிக்க முடியும் அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை
  • ஆண்டுதோறும் நாம் 1,200 டன் லித்தியத்தை இறக்குமதி செய்கிறோம்.
  • தற்போது, காஷ்மீரில் லித்தியம் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது 5.9 மில்லியன் டன் அளவுக்கு இருக்கும் என மதிப் பிடப்பட்டுள்ளது.
  • மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்புக்கு லித்தியம் மிக முக்கியமானது.
  • இதை நாம் பயன்படுத்தினால், வாகன உற்பத்தி துறையில் இந்தியா முதல் இடத்தை பிடிக்க முடியும்.
  •  வாகன உற்பத்தியில் இந்தியா கடந்தாண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளது.
  • தற்போது இந்திய வாகன தொழிலின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடி ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வருவாயில் வாகன உற்பத்தி துறையின் பங்களிப்பு மிக அதிகம்.
  • நமது புதுமையான அணுகு முறையால், பின்தங்கியுள்ள பகுதிகளில் நாம் வளர்ச்சியை அதிகரித்து வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
Next தினசரி தேசிய நிகழ்வு >