காங்கேயன்’ சின்னம் அறிமுகம் எஃப்ஐ எச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான சின்னமான 'காங்கேயனை' அறிமுகம் செய்து, கோப்பை சுற்றுப்பயணத்தையும் துணை முதல்வர் தொடங்கி வைத்தார். சர்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 14-ஆவது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் நவ. 28 முதல் டிச. 10-ஆம் தேதி வரை சென்னை, மதுரையில் நடைபெறவுள்ளது. தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி : ஹரியாணாவை சேர்ந்த 9 வயது அர்ஷி குப்தா, தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற இந்தியாவின் முதல் பெண் போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

