Tag: கமலா ஹாரிஸ்

வரலாறு

பாதுகாப்பு ரஃபேல்-எம் போர் விமானம் இந்திய விமானப் படையானது பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்துள்ளது. தற்போது இந்தியக் கடற்படையானது 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யவுள்ளது. முக்கிய அம்சங்கள் போர்க் கப்பல்களில் இருந்து புறப்படுவதற்கும், அவற்றில் தரையிறங்குவதற்கும் குறைந்த தொலைவிலான ஓடுதளமே இருக்கும். அதற்கேற்ற வகையில் ரஃபேல் -எம் போர் விமானங்களின் வடிவமைப்பு அமைந்துள்ளது. கடலிலேயே இருக்க வேண்டிய அவசியம் உள்ளதால், உப்புக் காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வசதிகள், தரையிறங்குவதற்கான கியர்கள், வலிமையான இறக்கைகள் உள்ளிட்டவை ரஃபேல் -எம் போர் விமானங்களில் இடம்பெற்றுள்ளன. போர்க் கப்பல்களில் விரிவான இடவசதிகள் இருக்காது. ரஃபேல் போர் விமானங்களில் இடம்பெற்றுள்ளதைப் போன்ற நீண்ட இறக்கைகள் ரஃபேல்-எம் போர் விமானங்களில் இடம்பெற்றால், குறைந்த எண்ணிக்கையிலான போர் விமானங்களையே போர்க் கப்பல்களில் நிறுத்த முடியும். அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில் ரஃபேல்-எம் போர் விமானங்களின் இறக்கைகள் சிறயதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. போர்க் கப்பல்களின் ஒட்டு மொத்த எடையைக் குறைக்கும் நோக்கில் ரஃபேல்-எம் போர் விமானங்கள் சிறயதாகவும், எடை குறைந்ததாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடற்சார் பாதுகாப்பு விவகாரங்களில் ஈடுபடுவதற்காக ரஃபேல்-எம் போர் விமானங்களில் கூடுதல் சென்சார் (உணர்வி), பாதுகாப்புக் கருவிகள் உள்ளிட்டபை பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாடுகளின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிவதற்கான நவீன ரேடார் கருவியும் அதில் பொருத்தப்பட்டுள்ளது. ரஃபேல் போர் விமானங்கள் தரைப்பரப்பிலேயே செயல்படும். ரஃபேல்-எம் போர் விமானங்கள் முற்றிலும் கடல் பரப்பிலேயே செயல்படும். ரஃபேல்-எம் போர் விமானங்கள் எப்போதும் போர்க் கப்பல்களில், கடல் சூழலிலேயே இருக்க வேண்டியுள்ளது. அதனால், கடலின் உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டு எளிதில் துருப்பிடிக்கத் தொடங்கிவிடும். அதைத் தடுக்கும் நோக்கில் சிறப்பு பூச்சுகள் ரஃபேல்-எம் போர் விமானத்தில் பூசப்பட்டிருக்கும். குறிப்பு இந்திய விமானப் படையில் ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுகோய் ரக போர் விமானங்களே பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பிறகு விமானப்படைக்கு நவீன ரஃபேல் ரக போர் விமானங்கள் கொள் முதல் செய்யப்பட்டன. சிறந்த நபர்கள் கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களுக்கு அதிக முறை வாக்களித்த துணை அதிபர் என்ற வரலாற்றுச் சாதனையை கமலா ஹாரிஸ் சமன் செய்துள்ளார். அமெரிக்காவின் துணை அதிபரே, அந்நாட்டு செனட் சபையின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். செனட் சபையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களுக்கு உறுப்பினர்கள் சம எண்ணிக்கையில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கும்பட்சத்தில், அப்போது மட்டுமே துணை அதிபர் வாக்களிப்பார். மற்ற சமயங்களில் அவருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபராக செனட் சபையில் கமலா ஹாரிஸ் வாக்களித்தது இது 31-ஆவது முறையாகும்.