ஓசியன்மேன் உலக இறுதி சாம்பியன்ஷிப் 2025 கடல்நீரில் நீந்தும் முக்கியமான போட்டியான ஓசியன்மேன் உலக இறுதி சாம்பியன்ஷிப், டிசம்பர் 5 முதல் 7, 2025 வரை துபாயில் நடைபெற்றது. இதில், ஆட்டிசம் குறைபாடு பிரிவைச் சேர்ந்த, சென்னையைச் சார்ந்த 15 வயதான ஏ.எல். நிகில் என்பவர், மாற்றுத்திறனாளிகளுக்கான இன்ஸ்பிரேஷன் பிரிவில் பங்கேற்று, 5 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 51 விநாடிகளில் நீந்திக் கடந்து, 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

