Tag: ஒரே பாரதம் உன்னத பாரதத்துக்கு தமிழகமே சிறந்த உதாரணம்

தினசரி தேசிய நிகழ்வுகள்

ஒரே பாரதம் உன்னத பாரதத்துக்கு தமிழகமே சிறந்த உதாரணம் ’ஒரே பாரதம் : உன்னத பாரதம்’ என்ற கொள்கைக்கு தமிழகமே சிறந்த உதாரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த காசி தமிழ்ச் சங்கம் வெற்றிகரமாக நடந்ததை அடுத்து, தமிழகத்திற்கும் குஜராத்திற்கும் இடையிலான உறவைக் கொண்டாடும் வகையிலான சௌராஷ்டிரா-தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, குஜராத்தின் சோமநாதபுரத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 17-இல் தொடங்கி ஒருவார காலத்துக்கு மேல் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகத்திலிருந்து ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். ’ஒரே பாரதம் : உன்னத பாரதம்’ என்ற சிந்தனையை வலுப்படுத்த தங்கள் இன்னுயிர் ஈந்த லட்சக் கணக்கான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கனவு சௌராஸ்டிரா-தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியின் மூலம் நனவாகியுள்ளது. குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேலும் தமிழகத்தின் மகாகவி பாரதியும் செய்த அர்ப்பணிப்புகளின் சங்கமமாக இவ்விழா விளங்குகிறது. உலகின் முதல் திரவ நானோ டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம் (டிஏபி) நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் கொண்ட உலகின் முதல் திரவ நானோ டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  புதுதில்லியில் வெளியிட்டார். நானோ யூரியா இந்த வரிசையில் முதல் முறையாக 2021 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. நானோ டிஏபி என்பது இரண்டாவது வகை உரமாகும். நானோ டிஏபியின் உற்பத்தி அலகுகளை இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO) செய்துள்ளது, இது நானோ வகை திரவ உரங்களின் காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO) பற்றி: 1967 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் உள்ள ஒரு பெரிய அளவிலான உர கூட்டுறவு நிறுவனமாகும். தலைமையகம் – புது தில்லி தாத்ரா, நகர் ஹவேலியின் முதல் மருத்துவக் கல்லூரி தாத்ரா, நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ யூனியன் பிரதேசத்தின் முதல் மருத்துவக் கல்லுரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். சில்வாசாவில் ரூ.203 கோடி செலவில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ’நமோ மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை’ பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இது, அந்த யூனியன் பிரதேசத்தின் முதல் மருத்துவக் கல்லூரியாகும்.