தினசரி தேசிய நிகழ்வுகள்

ஒரே பாரதம் உன்னத பாரதத்துக்கு தமிழகமே சிறந்த உதாரணம்

  • ’ஒரே பாரதம் : உன்னத பாரதம்’ என்ற கொள்கைக்கு தமிழகமே சிறந்த உதாரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த காசி தமிழ்ச் சங்கம் வெற்றிகரமாக நடந்ததை அடுத்து, தமிழகத்திற்கும் குஜராத்திற்கும் இடையிலான உறவைக் கொண்டாடும் வகையிலான சௌராஷ்டிரா-தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி, குஜராத்தின் சோமநாதபுரத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
  • கடந்த ஏப்ரல் 17-இல் தொடங்கி ஒருவார காலத்துக்கு மேல் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகத்திலிருந்து ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
  • ’ஒரே பாரதம் : உன்னத பாரதம்’ என்ற சிந்தனையை வலுப்படுத்த தங்கள் இன்னுயிர் ஈந்த லட்சக் கணக்கான சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கனவு சௌராஸ்டிரா-தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியின் மூலம் நனவாகியுள்ளது.
  • குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேலும் தமிழகத்தின் மகாகவி பாரதியும் செய்த அர்ப்பணிப்புகளின் சங்கமமாக இவ்விழா விளங்குகிறது.

உலகின் முதல் திரவ நானோ டை-அம்மோனியம் பாஸ்பேட் உரம் (டிஏபி)

  • நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் கொண்ட உலகின் முதல் திரவ நானோ டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 

புதுதில்லியில் வெளியிட்டார்.

  • நானோ யூரியா இந்த வரிசையில் முதல் முறையாக 2021 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நானோ டிஏபி என்பது இரண்டாவது வகை உரமாகும்.
  • நானோ டிஏபியின் உற்பத்தி அலகுகளை இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO) செய்துள்ளது, இது நானோ வகை திரவ உரங்களின் காப்புரிமைகளைக் கொண்டுள்ளது.

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (IFFCO) பற்றி:

  • 1967 இல் நிறுவப்பட்டது.
  • இது இந்தியாவில் உள்ள ஒரு பெரிய அளவிலான உர கூட்டுறவு நிறுவனமாகும்.
  • தலைமையகம் – புது தில்லி

தாத்ரா, நகர் ஹவேலியின் முதல் மருத்துவக் கல்லூரி

  • தாத்ரா, நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ யூனியன் பிரதேசத்தின் முதல் மருத்துவக் கல்லுரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
  • சில்வாசாவில் ரூ.203 கோடி செலவில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ’நமோ மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை’ பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இது, அந்த யூனியன் பிரதேசத்தின் முதல் மருத்துவக் கல்லூரியாகும்.
Next தினசரி தேசிய நிகழ்வு >