Tag: எண்ணும் எழுத்தும் திட்டம்

அரசியல்

அரசு நலத்திட்டங்கள் ”எண்ணும் எழுத்தும்” திட்டம் ”எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் கீழ் 5-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிய அடிப்படை திறனாய்வு (பேஸ் லைன் சர்வே) நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை ”எண்ணும் எழுத்தும்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. நிகழ் கல்வியாண்டில் (2023-2024) இந்தத் திட்டம் 4, 5 வகுப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக கற்றல் பாதிக்கப்பட்ட 8 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே கற்றல் இடைவெளியைக் குறைக்க. 2022 ஜுன் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார்.  திருவள்ளுரில் உள்ள அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2022-23 கல்வியாண்டிலிருந்து இப்பணி நடைபெறுகிறது. நோக்கம் -2025க்குள் அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் உறுதி செய்வது. திட்டத்தின் கூறுகள் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் பயிற்சி அளிக்கப்படும். கல்வித்துறை 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பயிற்சி புத்தகங்களை வழங்குகிறது.

தமிழ்நாடு

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - வருகை  அதிகரிப்பு தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள 1,543 அரசுப் பள்ளிகளில், 1,319 பள்ளிகளில் ஜூன் - ஜூலை 2022 உடன் ஒப்பிடும்போது,   இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.இந்த அறிக்கை  மாநில திட்டக்குழுவால்ஆய்வு  செய்யப்பட்டது. திட்டம் பற்றி தமிழக அரசு இந்த திட்டத்தை செப்டம்பர் 15, 2022 அன்று அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். மதுரை சிம்மக்கல்லில்  அறிமுகப்படுத்தப்பட்டது. எண்ணும் எழுத்தும் திட்டம் தமிழகம்   முழுவதும் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு இயக்கம் .அரசுப்  பள்ளிகளின்  வளர்ச்சிக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்வித் துறையானது, மார்ச் மாதத்தில் எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்ட அதன் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் திட்டம் (எண்ணும் எழுத்துத் திட்டம்) குறித்த விழிப்புணர்வைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம்   மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளும். திட்டம் பற்றி: ஜூன் 17,2022  அன்று தொடங்கப்பட்டது நோக்கம்: 2025 ஆம் ஆண்டுக்குள் 8 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு   அடிப்படை   எண்ணறிவு மற்றும் எழுத்தறிவை   உறுதி செய்வது. திருவள்ளூர் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது.