Tag: உலக வில்லித்தை: இந்திய மகளிரணி சாம்பியன்

வரலாறு

விளையாட்டு உலக வில்லித்தை: இந்திய மகளிரணி சாம்பியன்  ஜெர்மனியில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. கடந்த 1981 முதல் இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் இந்தியர்கள், இதில் சாம்பியனாவது இதுவே முதல் முறையாகும். காம்பவுண்ட் மகளிர் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்னீத் கௌர் கூட்டணி 235-229 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்ஸிகோ அணியை சாய்த்து முதலிடம் பிடித்தனர். ஃபிடே தரவரிசை அஜர்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ். வெற்றியை அடுத்து அவரது லைவ் ரேட்டிங் புள்ளிகள் 2,755.9-ஆக அதிகரிக்க, விஸ்வநாதன் ஆனந்தின் லைவ் ரேட்டிங் 2,754.0-ஆக உள்ளது. உலகத் தரவரிசையில் குகேஷ் 9-ஆவது இடத்துக்கு முன்னேறி, ஆனந்தை 10-ஆவது இடத்துக்கு தள்ளியிருக்கிறார். உயரம் குன்றியோருக்கான உலக விளையாட்டு போட்டிகள் ஜெர்மனியில் நடைபெறும், உயரம் குன்றியோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியன் இந்தியாவுக்காக பாட்மிண்டன் பிரிவில்  தங்கம் வென்றுள்ளார். நியமனங்கள் உள்துறை செயலர் அஜய் பல்லாவுக்கு 4-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படுவது இது 4-ஆவது முறையாகும். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதிவரை அவர்பதவியில் தொடர்வார் என்று மத்திய பணியாளர் அமைச்சக ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  உள்துறை செயலர் பற்றி நியமனம் - அமைச்சரவையின் நியமனக் குழு பணிக்காலம் - இரண்டு ஆண்டுகள், கால நீட்டிப்பும் செய்யப்படலாம் ராணுவ மேஜர் ஜெனரலாக குமரி பெண் தேர்வு இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவில் தமிழகத்திலிருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் உயர் பதவியான மேஜர் ஜெனரல் அந்தஸ்து பதவியை அடையும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. யானைகள் முகாம் பராமரிப்பாளராக பெள்ளி நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் நிரந்தர அடிப்படையில் முதல் பெண் பராமரிப்பாளராக பெள்ளி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிக அடிப்படையில் யானை பராமரிப்பாளராக பெள்ளி பணிபுரிகிறார். அவர் இப்போது நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஆதரவின்றி தவிக்கும் யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் பெள்ளியின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையைக் கருத்தில் கொண்டு, நிரந்தர அடிப்படையில் பராமரிப்பாளராக அவரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான பணி நியமன உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.