வரலாறு

விளையாட்டு

உலக வில்லித்தை: இந்திய மகளிரணி சாம்பியன் 

  • ஜெர்மனியில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. கடந்த 1981 முதல் இந்தப் போட்டியில் பங்கேற்று வரும் இந்தியர்கள், இதில் சாம்பியனாவது இதுவே முதல் முறையாகும்.
  • காம்பவுண்ட் மகளிர் அணிகள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்னீத் கௌர் கூட்டணி 235-229 என்ற புள்ளிகள் கணக்கில் மெக்ஸிகோ அணியை சாய்த்து முதலிடம் பிடித்தனர்.

ஃபிடே தரவரிசை

  • அஜர்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ். வெற்றியை அடுத்து அவரது லைவ் ரேட்டிங் புள்ளிகள் 2,755.9-ஆக அதிகரிக்க, விஸ்வநாதன் ஆனந்தின் லைவ் ரேட்டிங் 2,754.0-ஆக உள்ளது.
  • உலகத் தரவரிசையில் குகேஷ் 9-ஆவது இடத்துக்கு முன்னேறி, ஆனந்தை 10-ஆவது இடத்துக்கு தள்ளியிருக்கிறார்.

உயரம் குன்றியோருக்கான உலக விளையாட்டு போட்டிகள்

  • ஜெர்மனியில் நடைபெறும், உயரம் குன்றியோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில், தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.பாலசுப்பிரமணியன் இந்தியாவுக்காக பாட்மிண்டன் பிரிவில்  தங்கம் வென்றுள்ளார்.

நியமனங்கள்

உள்துறை செயலர் அஜய் பல்லாவுக்கு 4-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு

  • மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படுவது இது 4-ஆவது முறையாகும்.
  • இதன் மூலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதிவரை அவர்பதவியில் தொடர்வார் என்று மத்திய பணியாளர் அமைச்சக ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்துறை செயலர் பற்றி

  • நியமனம் – அமைச்சரவையின் நியமனக் குழு
  • பணிக்காலம் – இரண்டு ஆண்டுகள், கால நீட்டிப்பும் செய்யப்படலாம்

ராணுவ மேஜர் ஜெனரலாக குமரி பெண் தேர்வு

  • இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவில் தமிழகத்திலிருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • இந்திய ராணுவத்தின் உயர் பதவியான மேஜர் ஜெனரல் அந்தஸ்து பதவியை அடையும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யானைகள் முகாம் பராமரிப்பாளராக பெள்ளி

  • நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் நிரந்தர அடிப்படையில் முதல் பெண் பராமரிப்பாளராக பெள்ளி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தற்காலிக அடிப்படையில் யானை பராமரிப்பாளராக பெள்ளி பணிபுரிகிறார். அவர் இப்போது நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • ஆதரவின்றி தவிக்கும் யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் பெள்ளியின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையைக் கருத்தில் கொண்டு, நிரந்தர அடிப்படையில் பராமரிப்பாளராக அவரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
  • இதற்கான பணி நியமன உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
Next வரலாறு >