Tag: உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி 2023

வரலாறு

விளையாட்டு உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி 2023 கேட்டி லெடெக்கி 2023 ஆம் ஆண்டு ஜப்பானின் ஃபுகுவோகாவில் நடந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது 16வது தங்கப் பதக்கத்தை வென்றார். லெடெக்கி 1,500 ஃப்ரீ ஸ்டைலில் தங்கப் பதக்கம் வென்று பெல்ப்ஸின் சாதனையை சமன் செய்தார். ஜப்பானில் நடந்த 400 மீட்டர் ஃப்ரீ மற்றும் 4 x 200 மீட்டர் ஃப்ரீ ரிலேயில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார். கேட்டி லெடெக்கி இதுவரை ஆறு தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 14 தனிநபர் பிரிவில் உலகப் பட்டங்களைப் பெற்ற பெண் நீச்சல் வீராங்கனை ஆவார். லெடெக்கியின் வெற்றி ஒரே வகை போட்டியில் தொடர்ந்து ஆறு உலக சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் நீச்சல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். விருதுகள் மற்றும் கௌரவங்கள் “தகைசால்” தமிழர் விருது திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணிக்கு நிகழாண்டுக்கான  “தகைசால் தமிழர்“ விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்“ என்ற விருது 2021-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டுக்கான விருது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.  கடந்த ஆண்டு விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. லோகமான்ய திலகர் தேசிய விருது மகாராஷ்டிர மாநிலம், புனேயில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடிக்கு“லோகமான்ய திலகர் தேசிய விருது“ வழங்கப்பட்டது. திலக் ஸ்மாரக் மந்திர் அறக்கட்டளையால் கடந்த 1983-இல் ஏற்படுத்தப்பட்ட லோகமான்ய திலகர் தேசிய விருது, சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவர் பகவத் கீதையில் பெரும் நம்பிக்கை உடையவர். ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்ட சூழலிலும், கீதையை ஆராய்ந்து, கீதை ரகசியம் என்ற நூலை படைத்தார். இளம் திறமையாளர்களை அடையாளம் காணும் தனித்துவமான திறனுடன் திகழ்ந்தவர் திலகர். அவரால் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் வீரசாவர்க்கர். அதே போல், திலகரின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல்.