Tag: உலக அரிவாள் செல் இரத்த சோகை தினம் – ஜுன் 19

வரலாறு

முக்கிய தினங்கள் உலக அரிவாள் செல் இரத்த சோகை தினம் – ஜுன் 19 நோயாளிகள், குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அனுபவிக்கும் சவால்கள் பற்றிய பொது புரிதலை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் சர்வதேச அரிவாள் இரத்தசோகை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. அரிவாள் செல் சோகை பற்றி அரிவாள் செல் சோகை (SCD) என்பது உலகளவில் பரம்பரையாக பாதிக்கும் மற்றும் பொதுவான இரத்தக் கோளாறுகளில் ஒன்றாகும். இது மரபணுக் கோளாறு, இரத்த சோகை, கடுமையான வலிகள், மாரடைப்பு மற்றும் நாள்பட்ட உறுப்பு சேதம் மற்றும் ஆயுட்காலம் கணிசமாகக் குறைப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் அமைப்பு ரீதியான நோய் அறிகுறியை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் SCD  உலகளவில் இரண்டாவதாக இந்தியாவில் தான் அதிக அளவில் அரிவாள் செல் சோகை ஏற்படுகிறது. இங்கு 86 பிறப்புகளில் ஒருவருக்கு அரிவாள் செல் நோய் (SCD) உள்ளது.  இந்தியாவில், பொது மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது பழங்குடியினர் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பு: 2023-24 மத்திய பட்ஜெட்டில், இந்திய நிதியமைச்சர் 2047க்குள் இந்தியாவில் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிக்க இலக்கை அறிவித்திருந்தார். விளையாட்டு வாள்வீச்சு: வரலாறு படைத்தார் பவானி தேவி சீனாவில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெண்கலப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியின் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய போட்டியாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். மகளிருக்கான சப்ரே பிரிவில் களம் கண்ட பவானி தேவி காலிறுதியில், நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை 15-10 என்ற புள்ளிகளில் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. குறிப்பு: கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றதன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள் வீச்சு போட்டியாளர் என்ற பெருமையையும் பவானி தேவி பெற்றது குறிப்பிடத்தக்கது. விருதுகளும் கௌரவங்களும் கோரக்பூர் கீதா பதிப்பகத்துக்கு ”காந்தி அமைதி” விருது உ.பி. மாநிலம் கோரக்பூரில் இயங்கும் இந்தியாவின் முன்னணி பதிப்பகமாக கீதா பதிப்பகத்துக்கு 2021-ஆம் ஆண்டின் காந்தி அமைதி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2021-ஆம் ஆண்டு காந்தி அமைதி விருதுக்கு கோரக்பூரில் இயங்கி வரும் கீதா பதிப்பகத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. காந்தி அமைதி விருது பற்றி மகாத்மா காந்தியின் 125-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்காக காந்திய வழிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் காந்தி அமைதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. தேசியம், இனம், மொழி, ஜாதி, மதம் அல்லது பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் வழங்கப்படும் காந்தி அமைதி விருதை வென்றவர்களுக்கு ரூ.1 கோடி, பாராட்டுச் சான்றிதழ், நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள்/கைத்தறிப் பொருள் ஆகியவை வழங்கப்படும். குறிப்பு: கடந்த 1923-ஆம் அண்டு தொடங்கப்பட்ட கீதா…