வரலாறு

முக்கிய தினங்கள்

உலக அரிவாள் செல் இரத்த சோகை தினம் – ஜுன் 19

  • நோயாளிகள், குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அனுபவிக்கும் சவால்கள் பற்றிய பொது புரிதலை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் சர்வதேச அரிவாள் இரத்தசோகை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அரிவாள் செல் சோகை பற்றி

  • அரிவாள் செல் சோகை (SCD) என்பது உலகளவில் பரம்பரையாக பாதிக்கும் மற்றும் பொதுவான இரத்தக் கோளாறுகளில் ஒன்றாகும்.
  • இது மரபணுக் கோளாறு, இரத்த சோகை, கடுமையான வலிகள், மாரடைப்பு மற்றும் நாள்பட்ட உறுப்பு சேதம் மற்றும் ஆயுட்காலம் கணிசமாகக் குறைப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் அமைப்பு ரீதியான நோய் அறிகுறியை ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் SCD 

  • உலகளவில் இரண்டாவதாக இந்தியாவில் தான் அதிக அளவில் அரிவாள் செல் சோகை ஏற்படுகிறது. இங்கு 86 பிறப்புகளில் ஒருவருக்கு அரிவாள் செல் நோய் (SCD) உள்ளது. 
  • இந்தியாவில், பொது மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது பழங்குடியினர் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பு:

  • 2023-24 மத்திய பட்ஜெட்டில், இந்திய நிதியமைச்சர் 2047க்குள் இந்தியாவில் அரிவாள் செல் இரத்த சோகையை ஒழிக்க இலக்கை அறிவித்திருந்தார்.

விளையாட்டு

வாள்வீச்சு: வரலாறு படைத்தார் பவானி தேவி

  • சீனாவில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெண்கலப்பதக்கம் வென்றார்.
  • இந்தப் போட்டியின் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய போட்டியாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
  • மகளிருக்கான சப்ரே பிரிவில் களம் கண்ட பவானி தேவி காலிறுதியில், நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை 15-10 என்ற புள்ளிகளில் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:

  • கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றதன் மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வாள் வீச்சு போட்டியாளர் என்ற பெருமையையும் பவானி தேவி பெற்றது குறிப்பிடத்தக்கது.

விருதுகளும் கௌரவங்களும்

கோரக்பூர் கீதா பதிப்பகத்துக்கு ”காந்தி அமைதி” விருது

  • உ.பி. மாநிலம் கோரக்பூரில் இயங்கும் இந்தியாவின் முன்னணி பதிப்பகமாக கீதா பதிப்பகத்துக்கு 2021-ஆம் ஆண்டின் காந்தி அமைதி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2021-ஆம் ஆண்டு காந்தி அமைதி விருதுக்கு கோரக்பூரில் இயங்கி வரும் கீதா பதிப்பகத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வுக் குழு ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

காந்தி அமைதி விருது பற்றி

  • மகாத்மா காந்தியின் 125-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றத்துக்காக காந்திய வழிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் காந்தி அமைதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது.
  • தேசியம், இனம், மொழி, ஜாதி, மதம் அல்லது பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் வழங்கப்படும் காந்தி அமைதி விருதை வென்றவர்களுக்கு ரூ.1 கோடி, பாராட்டுச் சான்றிதழ், நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள்/கைத்தறிப் பொருள் ஆகியவை வழங்கப்படும்.

குறிப்பு:

  • கடந்த 1923-ஆம் அண்டு தொடங்கப்பட்ட கீதா பதிப்பகம், 16.21 கோடி பகவத்கீதை புத்தகங்கள் உள்பட 14 மொழிகளில் 41.7 கோடி புத்தகங்களை மலிவு விலையில் வெளியிட்டுள்ளது.

நியமனங்கள்

”ரா” உளவுப் பிரிவின் தலைவராக ரவி சின்ஹா 

  • இந்தியாவின் அயலக உளவுப் பிரிவான ”RAW” அமைப்பின் தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ”ரா”, ஐபி என இரு உளவு அமைப்புகளை இந்தியா கொண்டுள்ளது. ஐபி அமைப்பானது உள்நாட்டிலும், ரா அமைப்பானது வெளிநாடுகள் சார்ந்த உளவுத் தகவல்களையும் சேகரித்து வருகின்றன.

குறிப்பு:

  • மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 1988-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹாவை ”ரா” அமைப்பின் தலைவராக நியமிக்க நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துள்ளது.
  • அவர் 2 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் நீடிப்பார்.

RAW பற்றி

  • தலைமையகம் – புது தில்லி
  • நிறுவப்பட்டது – 1968
Next வரலாறு >