Tag: உலக அமைப்புகள் – ஒப்பந்தங்கள் மற்றும் மாநாடு

வரலாறு

உலக அமைப்புகள் – ஒப்பந்தங்கள் மற்றும் மாநாடு வர்த்தகப் பிரச்னைக்கு தீர்வு காண ஒப்புதல் வர்த்தகப் பிரச்னை தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யுடிஓ) தொடரப்பட்டுள்ள 6 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. பின்னணி: இந்திய எஃகு, அலுமினியப் பொருள்களுக்கு அமெரிக்கா கடந்த 2018-ஆம் ஆண்டில் முறையே 25 சதவீதம், 10 சதவீதம் இறக்குமதி வரியை விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்பிள், போரிக் அமிலம், பாதாம் உள்ளிட்ட 28 அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை விதித்தது. வர்த்தகப் பிரச்னை தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா, அமெரிக்கா சார்பில் தலா 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. WTO பற்றி தலைமை இயக்குநர் – என்கோசி ஒகோன்ஜோ-இவேலா தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டது – 1 ஜனவரி 1995 விருதுகளும் கௌரவங்களும் சாகித்திய அகாதெமி இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு ”யுவ புரஸ்கார்” விருதையும், சிறுவர் இலக்கியத்துக்கான ”பால சாகித்திய புரஸ்கார்” விருதையும் இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு சாகித்திய அகாதெமி வழங்கி வருகிறது. தமிழ் மொழிப் பிரிவில் ”திருக்கார்த்தியல்” எனும் சிறுகதைத் தொகுப்புக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கரின் ”ஆதனின் பொம்மை” எனும் நாவலுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு விருதுகளும் தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். குறிப்பு: இலக்கிய உலகில் உயரிய விருதாக கருதப்படும் சாகித்திய அகாதெமி விருது, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பல்கலை.க்கு விருது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சிறந்த மாநில பல்கலைக்கழக விருதை பால்வளத்துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் வழங்கினார்.