Tag: ஆதார் ஆணையத்தின் புதிய CEO

வரலாறு

முக்கிய தினங்கள் உலக அகதிகள் தினம் – ஜுன் 20 இது உலகெங்கிலும் உள்ள அகதிகளை கௌரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட சர்வதேச தினம். 2023-கருப்பொருள்: “வீட்டை விட்டு தொலைவில் உள்ளதாக நம்புகிறோம்”. சர்வதேச யோகா தினம் ஜுன் – 21 சர்வதேச யோகா தினம் 2014 ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 2015 ஆம் ஆண்டு முதல் ஜுன் 21 ஆம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது.  2023-கருப்பொருள்: ”வசுதைவ குடும்பத்திற்கான யோகா” நியமனங்கள் ஆர்பிஐ துணை ஆளுநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநராக பாரத ஸ்டைட் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பு: இந்திய ரிசர்வ் வங்கி தலைமைப் பொறுப்பில் ஆளுநரைத் தவிர மேலும், 4 துணை ஆளுநர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் இரு துணை ஆளுநர்கள் மத்திய அரசின் அதிகாரிகளில் இருந்து நியமிக்கப்படுவர். வர்த்தக வங்கிசார் நிர்வாகிகளில் இருந்து ஒரு துணை ஆளுநரும், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர் ஒரு துணை ஆளுநராகவும் நியமிக்கப்படுவர். ஆதார் ஆணையத்தின் புதிய CEO 1993-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அமித் அகர்வால், ஆதாரை நிர்வகிக்கும் நோட் இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணைத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றார். குறிப்பு: சத்தீஸ்கர் கேடரைச் சேர்ந்த திரு.அமித் அகர்வால், முன்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்தார்.