முக்கிய தினங்கள்
உலக அகதிகள் தினம் – ஜுன் 20
- இது உலகெங்கிலும் உள்ள அகதிகளை கௌரவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட சர்வதேச தினம்.
- 2023-கருப்பொருள்: “வீட்டை விட்டு தொலைவில் உள்ளதாக நம்புகிறோம்”.
சர்வதேச யோகா தினம் ஜுன் – 21
- சர்வதேச யோகா தினம் 2014 ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 2015 ஆம் ஆண்டு முதல் ஜுன் 21 ஆம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது.
- 2023-கருப்பொருள்: ”வசுதைவ குடும்பத்திற்கான யோகா”
நியமனங்கள்
ஆர்பிஐ துணை ஆளுநர் சுவாமிநாதன் ஜானகிராமன்
- இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநராக பாரத ஸ்டைட் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பு:
- இந்திய ரிசர்வ் வங்கி தலைமைப் பொறுப்பில் ஆளுநரைத் தவிர மேலும், 4 துணை ஆளுநர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- அவர்களில் இரு துணை ஆளுநர்கள் மத்திய அரசின் அதிகாரிகளில் இருந்து நியமிக்கப்படுவர்.
- வர்த்தக வங்கிசார் நிர்வாகிகளில் இருந்து ஒரு துணை ஆளுநரும், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர் ஒரு துணை ஆளுநராகவும் நியமிக்கப்படுவர்.
ஆதார் ஆணையத்தின் புதிய CEO
- 1993-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அமித் அகர்வால், ஆதாரை நிர்வகிக்கும் நோட் இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணைத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றார்.
குறிப்பு:
- சத்தீஸ்கர் கேடரைச் சேர்ந்த திரு.அமித் அகர்வால், முன்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக இருந்தார்.