Tag: வெம்பக்கோட்டை அகழாய்வு

தமிழ்நாடு நிகழ்வுகள்

வரலாறு மற்றும் பண்பாடு  வெம்பக்கோட்டை அகழாய்வு  பின்னணி: வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியின் போது ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒயின் போன்ற திரவங்களைக் கொண்டு செல்ல ரோமானிய மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ‘தர்பீடோ’ குடுவை வடிவ பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  தமிழக தொல்லியல் துறையினால் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரைகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், நுண்கற்கால கருவிகள், சுடுமண் காதணிகள், உருவ பொம்மைகள், மோதிரங்கள், வட்டுகள் மற்றும் தந்தத்தினால் ஆன பொருட்கள் உள்ளிட்ட பல அரிய கலைப்பொருட்கள் கிடைத்துள்ளன. ‘தர்பீடோ’ குடுவைகள் ரோமானிய மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் இருந்து திரவப் பொருட்கள் (ஆலிவ் எண்ணெய், ஒயின்) கொண்டு வர பயன்படுத்தப்பட்டவை ஆகும். இந்த கண்டுபிடிப்பு பண்டைய தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாகும். இந்தப் பொருட்களின் இருப்பு, பண்டைய தமிழ் வணிகர்கள் வைப்பாற்றுப் படுகை வழியாக வெளிநாட்டுப் பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துகிறது. வெம்பக்கோட்டை அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்டவை  இது விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு  தங்கப் பொருட்கள் 1.15 மீட்டர் முதல் 1.59 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒன்று கூம்பு வடிவிலும், மற்றொன்று செவ்வக வடிவிலும் உள்ளது. தந்தத்தினால் ஆன பகடை, சுடுமண் புகைக்குழாய், காதணி மற்றும் கல்லால் ஆன எடைக்கருவி உள்ளிட்ட 1,300-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு திமில் கொண்ட காளையின் உருவம் பொறிக்கப்பட்ட கார்னிலியன் இன்டாக்லியோ (முத்திரைக்கல்) இங்கு கிடைத்துள்ளது. தமிழக அகழ்வாராய்ச்சியில் இத்தகைய கல் கிடைப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு மதுரையருகே உள்ள கீழடியில் காட்டுப்பன்றி உருவம் பொறிக்கப்பட்ட இதே போன்ற ஒரு முத்திரைக்கல் கண்டெடுக்கப்பட்டது. கார்னிலியன் கற்கள் பொதுவாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே காணப்படுபவை. மேலும் 'இன்டாக்லியோ' செதுக்கல் முறை ரோம் (Rome) நாட்டைச் சேர்ந்தது. கீழடி மற்றும் முசிறியில் கண்டெடுக்கப்பட்ட கார்னிலியன் முத்திரைக் கற்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு தகவல்கள் 2033-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் கொண்டுவரப்படுவர் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில நிகழ்வுகள்

வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டத்திற்கான கணக்கெடுப்பு புதிய இந்தியா எழுத்தறிவுத் திட்டம் (NILP) 2022- 2027ன் கீழ் கல்வியறிவு இல்லாதவர்களைக் கண்டறிய பள்ளிக் கல்வித் துறை ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தால் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 16,463 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். NILP திட்டம் பற்றி குறிக்கோள் - அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் அறிவு மற்றும் அடிப்படை வாழ்வியல் திறன்களை வழங்குதல் புதிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகள் - அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எழுத்தறிவு இல்லாதவர்கள் குறிப்பு 1992 முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மொத்த எழுத்தறிவு பிரச்சாரம் மற்றும் அடிப்படைக் கல்வியறிவுக்குப் பிந்தைய பிரச்சாரம் ஆகியவை புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம் (NILP) 2022- 2027 இன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அகழாய்வு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வு தளத்தில் மூன்றாவது கட்ட தொல்லியல் அகழாய்வு சமீபத்தில் தொடங்கியது. வைப்பாற்றின் வடக்கு கரையில் 1.5 ஏக்கரில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சியின் போது மொத்தம் 7,914 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றின் கரையோரம் மக்கள் வாழ்ந்ததை இது உறுதிபடுத்துகிறது. குறிப்பு முதல் கட்ட அகழாய்வு மார்ச் 2022ல் மேற்கொள்ளப்பட்டது. காலநிலை முதலீட்டு பயிலரங்கு பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) சமீபத்தில் உலக வங்கியின் சர்வதேச நிதிக் கழகத்துடன் (IFC) இணைந்து இரண்டு நாள் காலநிலை முதலீட்டுப் பயிலரங்கை நடத்தியது. இந்த பயிலரங்கு சென்னை நகரத்திற்கான ஒரு விரிவான சுற்றுச்சூழல் உத்தியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு செயல்படுத்தும் காலநிலை மாற்ற திட்டங்கள் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் காலநிலை ஸ்டுடியோ (அண்ணா பல்கலைக்கழக வளாகம்) காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு மாநில செயல் திட்டம் 0 (TNSAPCC) காலநிலை ஸ்மார்ட் கிராமங்கள் கோயம்பேடு சந்தையில் கார்பன் சமநிலை திட்டம் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் பசுமை தமிழ்நாடு திட்டம் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தமிழ்நாடு ஈரநிலங்கள் திட்டம் தட்பவெப்ப நிலையைத் தாங்கும் பசுமைக் கோயில்கள் திட்டம் கார்பன் செறிவூட்டல் திட்டம்.