தமிழ்நாடு நிகழ்வுகள்

வரலாறு மற்றும் பண்பாடு 

வெம்பக்கோட்டை அகழாய்வு 

  • பின்னணி: வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியின் போது ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒயின் போன்ற திரவங்களைக் கொண்டு செல்ல ரோமானிய மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ‘தர்பீடோ’ குடுவை வடிவ பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  •  தமிழக தொல்லியல் துறையினால் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரைகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், நுண்கற்கால கருவிகள், சுடுமண் காதணிகள், உருவ பொம்மைகள், மோதிரங்கள், வட்டுகள் மற்றும் தந்தத்தினால் ஆன பொருட்கள் உள்ளிட்ட பல அரிய கலைப்பொருட்கள் கிடைத்துள்ளன.
  • ‘தர்பீடோ’ குடுவைகள் ரோமானிய மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் இருந்து திரவப் பொருட்கள் (ஆலிவ் எண்ணெய், ஒயின்) கொண்டு வர பயன்படுத்தப்பட்டவை ஆகும்.
  • இந்த கண்டுபிடிப்பு பண்டைய தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாகும்.
  • இந்தப் பொருட்களின் இருப்பு, பண்டைய தமிழ் வணிகர்கள் வைப்பாற்றுப் படுகை வழியாக வெளிநாட்டுப் பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துகிறது.

வெம்பக்கோட்டை அகழாய்வில் இதுவரை கண்டெடுக்கப்பட்டவை 

  • இது விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இங்கு  தங்கப் பொருட்கள் 1.15 மீட்டர் முதல் 1.59 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒன்று கூம்பு வடிவிலும், மற்றொன்று செவ்வக வடிவிலும் உள்ளது.
  • தந்தத்தினால் ஆன பகடை, சுடுமண் புகைக்குழாய், காதணி மற்றும் கல்லால் ஆன எடைக்கருவி உள்ளிட்ட 1,300-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இங்கு திமில் கொண்ட காளையின் உருவம் பொறிக்கப்பட்ட கார்னிலியன் இன்டாக்லியோ (முத்திரைக்கல்) இங்கு கிடைத்துள்ளது. தமிழக அகழ்வாராய்ச்சியில் இத்தகைய கல் கிடைப்பது இது இரண்டாவது முறையாகும்.
  • இதற்கு முன்பு மதுரையருகே உள்ள கீழடியில் காட்டுப்பன்றி உருவம் பொறிக்கப்பட்ட இதே போன்ற ஒரு முத்திரைக்கல் கண்டெடுக்கப்பட்டது.
  • கார்னிலியன் கற்கள் பொதுவாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டுமே காணப்படுபவை. மேலும் ‘இன்டாக்லியோ’ செதுக்கல் முறை ரோம் (Rome) நாட்டைச் சேர்ந்தது.
  • கீழடி மற்றும் முசிறியில் கண்டெடுக்கப்பட்ட கார்னிலியன் முத்திரைக் கற்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு தகவல்கள்

  • 2033-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவக் காப்பீடு வரம்புக்குள் கொண்டுவரப்படுவர் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next தமிழ்நாடு நிகழ்வுகள் >

People also Read