மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் குழு அமைப்பு தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின்படி பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கலைத்திட்ட வடிவமைப்புக் குழு, கலைத்திட்ட உயர்நிலைக் குழு என இரு குழுக்களை பள்ளிக் கல்வித்துறை நியமனம் செய்துள்ளது. குழுக்களின் பணிகள் அரசாணையின்படி கலைத் திட்ட வடிவமைப்புக் குழுவானது கற்றல்-கற்பித்தல் நோக்கங்களுக்கும், கற்றல் அடைவுக்குமான இடை வெளியைக் கருத்தில் கொண்டு தற்போதைய கலைத்திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் அணுகு முறை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளும் அதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கல்விசார் கருத்துகளையும் பெற்று, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கென புதிய கலைத்திட்ட வடிவமைப்புக்கான பரிந்துரைகள், வரைவுப் பாடத்திட்டம் ஆகியவற்றை உருவாக்கிய உயர்நிலைக் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கும் . கலைத்திட்ட வடிவமைப்புக் குழு: தலைவர் மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் உறுப்பினர்கள் வரலாறு மற்றும் தொல்லியல் வல்லுநர்முனைவர் கா.ராஜன், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் அறிவியலாளர் த.வி.வெங்கடேஷ்வரன், சென்னை பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர் ரீட்டா ஜான், மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள் பேராசிரியர்மு.சுதந்திரமுத்து, தாவரவியல் வல்லுநர் நா.மதிவாணன், வரலாற்று வல்லுநர் த.அசோகன், ஆங்கிலமொழி கற்பித்தல் வல்லுநர் உமா ராமன், புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் மணியம் செல்வன், கல்வியாளர் ர.சந்தனதேவன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீ.தீலிப் கலைத்திட்ட உயர்நிலைக்குழு: தலைவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் உறுப்பினர்கள் இஸ்ரோ தலைவர் வ.நாராயணன், கணிதவியல் இரா.இராமானுஜம், கல்வியாளர் ச.மாடசாமி, தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சீ.சௌமியா, நாட்டுப்புறவியல் மற்றும் நிகழ்த்துக்கலை கோ.பழனி, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள், அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதலீடு செய்ய கேமிங் நிறுவனங்களுக்கு அழைப்பு அனிமேஷன், விஷுவம் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையின் வளர்ச்சிக்காக புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கேம் டெவலப்பர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் 17-வது இந்திய கேம் டெவலப்பர்களுக்கான மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் 05.11.25 அன்று தொடங்கியது. தமிழகத்தில் முதல்முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் புகழ்பெற்ற நிண்டெண்டோ நிறுவனம் முதல்முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது.

