தமிழ்நாடு விவகாரங்கள்

மாநில கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் குழு அமைப்பு 

  • தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின்படி பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கலைத்திட்ட வடிவமைப்புக் குழு, கலைத்திட்ட உயர்நிலைக் குழு என இரு குழுக்களை பள்ளிக் கல்வித்துறை நியமனம் செய்துள்ளது.

குழுக்களின் பணிகள்

  • அரசாணையின்படி கலைத் திட்ட வடிவமைப்புக் குழுவானது கற்றல்-கற்பித்தல் நோக்கங்களுக்கும், கற்றல் அடைவுக்குமான இடை வெளியைக் கருத்தில் கொண்டு தற்போதைய கலைத்திட்டம், பாடத்திட்டம், கற்பித்தல் அணுகு முறை மற்றும் மதிப்பீட்டு முறைகள் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளும்
  • அதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கல்விசார் கருத்துகளையும் பெற்று, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில் தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கென புதிய கலைத்திட்ட வடிவமைப்புக்கான பரிந்துரைகள், வரைவுப் பாடத்திட்டம் ஆகியவற்றை உருவாக்கிய உயர்நிலைக் குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கும் .
கலைத்திட்ட வடிவமைப்புக் குழு

  • தலைவர் மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் 

உறுப்பினர்கள் 

  • வரலாறு மற்றும் தொல்லியல் வல்லுநர்முனைவர் கா.ராஜன்,
  • மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மற்றும் அறிவியலாளர் த.வி.வெங்கடேஷ்வரன், 
  • சென்னை பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர் ரீட்டா ஜான், 
  • மாநிலக் கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள்
  • பேராசிரியர்மு.சுதந்திரமுத்து,
  • தாவரவியல் வல்லுநர் நா.மதிவாணன், 
  • வரலாற்று வல்லுநர் த.அசோகன், 
  • ஆங்கிலமொழி கற்பித்தல் வல்லுநர் உமா ராமன், 
  • புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் மணியம் செல்வன், 
  • கல்வியாளர் ர.சந்தனதேவன், 
  • விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீ.தீலிப் 
கலைத்திட்ட உயர்நிலைக்குழு: 

  • தலைவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர்

உறுப்பினர்கள் 

  • இஸ்ரோ தலைவர் வ.நாராயணன், 
  • கணிதவியல்  இரா.இராமானுஜம், 
  • கல்வியாளர் ச.மாடசாமி, 
  • தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சீ.சௌமியா, 
  • நாட்டுப்புறவியல் மற்றும் நிகழ்த்துக்கலை  கோ.பழனி, 
  • இந்திய கிரிக்கெட் அணியின்  வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்,
  • குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன்
  • பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள், அரசுத் தேர்வுகள் இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் முதலீடு செய்ய கேமிங் நிறுவனங்களுக்கு அழைப்பு

  • அனிமேஷன், விஷுவம் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறையின் வளர்ச்சிக்காக புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • கேம் டெவலப்பர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் 17-வது இந்திய கேம் டெவலப்பர்களுக்கான மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் 05.11.25  அன்று தொடங்கியது. 
  • தமிழகத்தில் முதல்முறையாக நடத்தப்படும் இந்த மாநாட்டை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
  • புகழ்பெற்ற நிண்டெண்டோ நிறுவனம் முதல்முறையாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது.
Next Current Affairs தமிழ்நாடு விவகாரங்கள் >