Tag: பசும்பொன் முத்துராமலிங்கரின் பிறந்தநாள்

சிறந்த நபர்கள்

பசும்பொன் முத்துராமலிங்கரின் பிறந்தநாள்  முழுப் பெயர்: உக்கிரபாண்டி முத்துராமலிங்கர் பிறப்பு: அக்டோபர் 30, 1908 – பசும்பொன், இராமநாதபுரம் மாவட்டம் இறப்பு: அக்டோபர் 30, 1963 தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர், தேசபக்தர், அரசியல்வாதி. ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசில் செயல்பட்டார்; பின்னர் சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். சுபாஷ் சந்திர போஸ் தலைமையையும், அவரது முழுமையான சுதந்திரக் கொள்கையையும் ஆதரித்தார். இராமநாதபுரம் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.  1934 ஆம் ஆண்டு மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார் இவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது 1936, 1955ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை பர்மா சென்றிருந்தார். 1938 ஆம் ஆண்டு மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார். 1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் திகழ்ந்துள்ளார். 1939 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் எட்டாம் நாள் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார்.  1946 இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற்றார். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். 1962 இல் நாடாளுமன்றத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக, பரப்புரை செய்ய இயலாதபோதிலும் வெற்றிபெற்றார். அவர் “பசும்பொன் முத்துராமலிங்கத் என மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். அவரின் சமாதி பசும்பொனில் அமைந்துள்ளது.இது தமிழ்நாட்டின் முக்கிய நினைவிடங்களில் ஒன்றாகும்