பசும்பொன் முத்துராமலிங்கரின் பிறந்தநாள்
- முழுப் பெயர்: உக்கிரபாண்டி முத்துராமலிங்கர்
- பிறப்பு: அக்டோபர் 30, 1908 – பசும்பொன், இராமநாதபுரம் மாவட்டம்
- இறப்பு: அக்டோபர் 30, 1963
- தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர், தேசபக்தர், அரசியல்வாதி.
- ஆரம்பத்தில் இந்திய தேசிய காங்கிரசில் செயல்பட்டார்; பின்னர் சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார்.
- சுபாஷ் சந்திர போஸ் தலைமையையும், அவரது முழுமையான சுதந்திரக் கொள்கையையும் ஆதரித்தார்.
- இராமநாதபுரம் தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
- 1934 ஆம் ஆண்டு மே 12, 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார் இவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது
- 1936, 1955ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை பர்மா சென்றிருந்தார்.
- 1938 ஆம் ஆண்டு மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார்.
- 1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் திகழ்ந்துள்ளார்.
- 1939 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் எட்டாம் நாள் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார்.
- 1946 இல் சட்டமன்ற தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற்றார்.
- 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.
- 1962 இல் நாடாளுமன்றத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக, பரப்புரை செய்ய இயலாதபோதிலும் வெற்றிபெற்றார்.
- அவர் “பசும்பொன் முத்துராமலிங்கத் என மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.
- அவரின் சமாதி பசும்பொனில் அமைந்துள்ளது.இது தமிழ்நாட்டின் முக்கிய நினைவிடங்களில் ஒன்றாகும்

