கடற்படை தினம் 2025 இந்தியக் கடற்படையானது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில் ஒரு பெரிய அளவிலான செயல்பாட்டு விளக்கத்துடன் (Operational Demonstration) கடற்படை தினத்தைக் கொண்டாடியது. 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது 'ஆபரேஷன் ட்ரைடென்ட்' நடவடிக்கையில் இந்தியாவின் தீர்க்கமான கடற்படை வெற்றியைப் பெருமைப்படுத்தும் விதமாக டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச சிறுத்தை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி 2010 முதல் சர்வதேச சிறுத்தை தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டில் சிறுத்தை பாதுகாப்பு நிதியத்தை (Cheetah Conservation Fund) நிறுவிய அமெரிக்க விலங்கியல் நிபுணர், டாக்டர். லௌரி மார்க்கர், அவர் வளர்த்த 'காயம்' என்ற சிறுத்தையின் நினைவாக இந்த நாளைத் தேர்ந்தெடுத்தார். வடமேற்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசியச் சிறுத்தைகளைத் தவிர, மற்ற அனைத்து சிறுத்தை துணையினங்களும் (subspecies) தற்போது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) மூலம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் (vulnerable) பட்டியலிடப்பட்டுள்ளன; இவை மிகவும் ஆபத்தான நிலையில் (critically endangered) உள்ளன.

