முக்கிய தினங்கள்

கடற்படை தினம் 2025 

  • இந்தியக் கடற்படையானது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில் ஒரு பெரிய அளவிலான செயல்பாட்டு விளக்கத்துடன் (Operational Demonstration) கடற்படை தினத்தைக் கொண்டாடியது.
  • 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ நடவடிக்கையில் இந்தியாவின் தீர்க்கமான கடற்படை வெற்றியைப் பெருமைப்படுத்தும் விதமாக டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச சிறுத்தை தினம் 

  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி 2010 முதல் சர்வதேச சிறுத்தை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 1991 ஆம் ஆண்டில் சிறுத்தை பாதுகாப்பு நிதியத்தை (Cheetah Conservation Fund) நிறுவிய அமெரிக்க விலங்கியல் நிபுணர், டாக்டர். லௌரி மார்க்கர், அவர் வளர்த்த ‘காயம்’ என்ற சிறுத்தையின் நினைவாக இந்த நாளைத் தேர்ந்தெடுத்தார்.
  • வடமேற்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசியச் சிறுத்தைகளைத் தவிர, மற்ற அனைத்து சிறுத்தை துணையினங்களும் (subspecies) தற்போது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) மூலம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் (vulnerable) பட்டியலிடப்பட்டுள்ளன; இவை மிகவும் ஆபத்தான நிலையில் (critically endangered) உள்ளன.
Next Current Affairs முக்கிய தினங்கள >