தேசிய திட்டங்கள்

ஞான பாரதம் இயக்கம்

  • பின்னணி: இந்தியாவின் கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்யவும், ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும், டிஜிட்டல் மயமாக்கவும் மற்றும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் கலாச்சார அமைச்சகம் ‘ஞான பாரதம் இயக்கம்’-ஐத் தொடங்கியுள்ளது.
  • இந்த மிஷன் நாடு முழுவதும் கிளஸ்டர் மையங்கள் (CC – Cluster Centers) மற்றும் சுதந்திர மையங்கள் (IC – Independent Centers) அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதுவரை 40-க்கும் மேற்பட்ட CC மற்றும் IC மையங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
  • 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த நோடல் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக (Nodal Coordinating Authorities) இணைந்துள்ளன.
  • மெட்டாடேட்டா உருவாக்கம் (Metadata creation), உபகரணங்கள் நிறுவுதல், செயற்கை நுண்ணறிவு தளம் (Artificial Intelligence – AI) மற்றும் நீண்டகால தரவு சேமிப்பு ஆகியவற்றிற்கு தொழில்நுட்ப கூட்டாளர்கள் ஆதரவளிக்கின்றனர்.
  • நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் உள்ள சுமார் 1 கோடி கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்து டிஜிட்டல் மயமாக்குவது இலக்கு.
  • டிஜிட்டல் செய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் தேசிய டிஜிட்டல் களஞ்சியம் (NDR – National Digital Repository) மூலம் மையப்படுத்தப்பட்ட அணுகலுடன் சேமிக்கப்படும்.
  • இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI – National Archives of India) வரலாற்று பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • தரவின் நம்பகத்தன்மை மற்றும் மாற்றமின்மை உறுதிப்படுத்த செக்சம் சரிபார்ப்பு (Checksum verification) முறை பயன்படுத்தப்படுகிறது.

 

Next அறிவியல் >