இந்திய அரசியல்

கேரளம் – பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பின்னணி :  மத்திய அமைச்சரவை  கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்குப் பிறகு, கேரளம் மசோதா 2026-ஐ மாநில சட்டப்பேரவைக்கு குடியரசுத் தலைவர் அனுப்புவார்.

சட்டப்பூர்வ நடைமுறை

    • மசோதா அரசியலமைப்புச் சட்டம் 8-வது அட்டவணை உட்பட அனைத்து மொழிகளிலும் பெயர் மாற்றத்தை சுட்டிக்காட்டும்.
    • மாநில சட்டப்பேரவை ஒப்புதலுக்குப் பிறகு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றும்.
    • அனைத்து நடைமுறைகள் முடிந்ததும், “கேரளம்” என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
  • அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் பட்டியலிடுகிறது.
  • இந்திய அரசியலமைப்பின் சரத்து 3, தற்போதுள்ள மாநிலங்களின் பெயரை மாற்ற ஒன்றியத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கேரளா உருவாக்கப்பட்டது.
  • இத்தகைய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களைக் குடியரசுத் தலைவர் கேட்க வேண்டும்.

பெயர் மாற்றம் செய்த மாநிலங்கள் 

  • ஐக்கிய மாகாணங்கள் உத்தரப் பிரதேசமாக மாற்றப்பட்டது (1950): மறுபெயரிடப்பட்ட முதல் மாநிலம்.
  • திருவிதாங்கூர்-கொச்சி கேரளாவாக மாற்றப்பட்டது (1956): மாநில மறுசீரமைப்பின் போது மறுபெயரிடப்பட்டது.
  • மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு (1969): ஜனவரி 14, 1969 அன்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.
  • மைசூர் கர்நாடகாவாக மாற்றப்பட்டது 1973 இல் மறுபெயரிடப்பட்டது.

உத்தராங்கல் உத்தரகாண்ட் 2007 இல் மறுபெயரிடப்பட்டது.

< Previous Current Affairs Next இந்திய அரசியல் >