தேசிய திட்டங்கள்

சம்பன் (SAMPANN)

  • இது தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த ஆன்லைன் ஓய்வூதிய மேலாண்மை அமைப்பாகும்.
  • இது ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஓய்வூதியத்தைச் செயலாக்குதல், அனுமதித்தல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றை ஒரே தளத்தில் எளிதாக்குகிறது.

வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (டிஎல்ஐ – DLI) திட்டம்

  • செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டத்தில், உள்நாட்டு புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு, நிதி ஊக்கத்தொகைகளுடன் மேம்பட்ட வடிவமைப்பு உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் வலுவான, தற்சார்பு சிப் வடிவமைப்பு சூழல் ஊக்குவிக்கப்படும். 

இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) 

  • 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்மிஷன், இந்தியாவை உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக உருவாக்குவதையும், செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க நோக்கமாகக் கொண்டது.
  • இதனை மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) செயற்படுத்துகிறது
Next Current Affairs தேசிய திட்டங்கள் >