தினசரி தேசிய நிகழ்வுகள்

சிறுதானியங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்: நபார்டு வங்கியிடம் நிர்மலா சீதாராமன் 

  • ”குறைந்த நீரை ஈர்த்து அதிகலாபம் தரக் கூடிய சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை பயிர்களை விளைவிக்க விவசாயிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்” என்று நபார்டு (தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான வங்கி) வங்கியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு ”ஸ்ரீ அன்னம்” திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்ததலுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதன் அடிப்படையில், சிறுதானியங்கள் விளைவிக்கும் பரப்பளவை அதிகரிக்க விவசாயிகளுக்கு நபார்டு வங்கி ஊக்கமளிக்க வேண்டும்.

நபார்டு பற்றி

  • தலைவர் – ஸ்ரீ ஷாஜி கே வி
  • தலைமையகம் – மும்பை
  • நிறுவப்பட்டது – 1982
Next தினசரி தேசிய நிகழ்வு >