தமிழ்நாடு

தமிழகத்தின் மேலும் 3 பொருள்களுக்கு புவிசார் குறியீடு

  • திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் செடிபுட்டா  சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.
  • தமிழகத்தில் இதுவரை தஞ்சாவூர் வீணை, கலைத்தட்டு, ஓவியம் உள்பட 55 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 

செடிபுட்டா சேலை:

  • திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வீரவநல்லுரில் செடிபுட்டா சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது. 
  • இந்தக் கைத்தறி சேலையில் ஒரு செடியில் பூக்களும், இலைகளும் இருப்பது போல் புட்டா போட்டு நெய்யப்பட்டது. இதனால் நாளடைவில் செடிபுட்டா என்ற பெயர் பெற்றது. 
  • பட்டு மற்றும் பருத்தி கலவை துணியில் இந்தச் சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது. 
  • இந்தச் சேலை நெசவு குஜராத்தில் இருந்து தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடியேறிய சௌராஷ்டிர சமூகத்தில் இருந்து உருவானது. 

ஐடேரி நாமக்கட்டி: 

  • திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜடேரி கிராமத்தில் 300 ஆண்டுகளாக வாழ்வாதாரத்துக்காகச் கிராம மக்கள் நாமக்கட்டிகளை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகின்றனர். 
  • வெள்ளை களிமண் துண்டுகளாக நாமக்கட்டியைத் தயாரித்து வருகின்றனர். 
  • நாமக்கட்டிக்களைத் தயாரிப்பதற்கான வெள்ளை பூமி ஜடேரி கிராமத்துக்கு அருகிலுள்ள தென்பூண்டிப்பட்டில் கிடைக்கிறது. 
  • விரல் வடிவில் உள்ள இந்த நாமக்கட்டிகள் மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது.

மட்டி வாழைப்பழம்: 

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிவார மலைகளுக்கு அருகில் மட்டி வாழைப்பழம் முக்கிய சாகுபடியாக உள்ளது. 
  • இது முதலை விரல் வாழைப்பழம் எனவும் அழைக்கப்படுகிறது. 
  • இதன் அறுவடைக் காலம் செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை இருக்கும். 
  • இந்த வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியமான இதயத்தையும், ரத்த அழுத்தத்தையும் பராமரிக்க உதவுகிறது. 
Next தமிழ்நாடு >