தேசிய நிகழ்வுகள்

MLFF சுங்கச்சாவடி கட்டண வசூல் அமைப்பு 2026

  • மத்திய அரசு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் பலவழிப் பாதை தடையற்ற ஓட்ட (MLFF) சுங்கச்சாவடி கட்டண வசூல் அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நெடுஞ்சாலை மேலாண்மை அமைப்பைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்த அமைப்பு சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை முழுமையாக நீக்கி, பயணத்திறனை மேம்படுத்தும்
  • வாகனங்கள் சுங்கச்சாவடிப் பகுதிகளை நிறுத்தாமல், மணிக்கு 80 கி.மீ வேகத்தில் கடந்து செல்ல முடியும்.
  • MLFF அமைப்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உரிமத் தகடு அங்கீகாரமும், செயற்கைக்கோள் கண்காணிப்பும் மற்றும் FASTag ஒருங்கிணைப்பு மூலம் சுங்கக் கட்டணங்களை தானாகவே வசூலிக்கும்.

இந்தியாவின் முதல் வனவியல் பல்கலைக்கழகம்

  • இந்தியாவின் முதல் வனவியல் பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் நிறுவப்பட உள்ளது.
  • இந்தப் பல்கலைக்கழகம் வனவியல், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
Next Current Affairs தேசிய நிகழ்வுகள் >