விண்வெளி
இஸ்ரோவின் வர்த்தக சாதனை:
- 1993 முதல் இதுவரை 34 நாடுகளின் 434 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன.
- நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.
எல்விஎம்-3 ராக்கெட் திறன்:
- அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன ராக்கெட்
- புவி தாழ்வட்டப் பாதையில் 8,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், ஒத்திசைவுப் பாதை யில் 4,000-க்கும் அதிகமான எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்த முடியும்.
எல்விஎம்-3 முக்கிய பயணங்கள்:
| 2017 | ஜிசாட்-19 (முதல் வெற்றி) |
| 2019 | சந்திரயான்-2 (3,850 கிலோ) |
| 2022 அக்டோபர் | ஒன்வெப் 36 செயற்கைக்கோள்கள் |
| 2023 மார்ச் | ஒன்வெப் 36 செயற்கைக்கோள்கள் |
| 2023 | சந்திரயான்-3 |
| நவம்பர் 2024 | சிஎம்எஸ்-3 (4,400 கிலோ) |
| டிசம்பர் 2025 | ப்ளூபேர்ட்-6 (6,100 கிலோ) |
ராக்கெட் தயாரிப்பு பயணம் தொடக்கம்:
- 1980 ஆம் ஆண்டு 35 கிலோ எடை கொண்ட ரோகிணி (RS-1) சோதனை செயற்கைக்கோள் SLV-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தியது.
பரிணாம வளர்ச்சி:
ககன்யான் திட்டம்:
- விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டமாகும்.
- LVM-3 ராக்கெட் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- விண்வெளி வீரர்கள் புவியிலிருந்து 400 கி.மீ. சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள்.
- பின்னர், மீண்டும் அதே விண்கலம் மூலம் பாதுகாப்பாக தரையிறக்கப்படுவார்கள்.
வியோமித்ரா மிஷன்:
- ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்னர், ‘வியோமித்ரா’ என்ற பெண் தோற்றம் கொண்ட ரோபோவை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகியுள்ளது.
- வியோமித்ரா சோதனை வெற்றியடைந்தால், அடுத்தகட்டமாக ககன்யான் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.
- அதன்மூலம் தங்கள் சொந்த நாட்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்கா, ரஷியா, சீனாவின் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும்.
பாரதிய அந்தரீக்ஷ நிலையம் 2035
- எதிர்காலத்தில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. பாரதிய அந்தரீக்ஷ நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தத் திட்டத்துக்கான கனவுகளைச் சுமக்கத் தயாராகி வருகிறது எல்விஎம்-3.

