அறிவியல்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டு பிடிப்புகள்

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நீரிழிவு விழித்திரை நோய் பரிசோதனைத் திட்டம்

  • இது நீரிழிவு விழித்திரை நோய்க்கான இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சமூகப் பரிசோதனைத் திட்டமாகும்.
  • நோக்கம்: முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் நீரிழிவு நோயால் ஏற்படும் குருட்டுத்தன்மையைக் குறைத்தல்.
  • இந்த முயற்சி, சமூக மட்டத்தில் நீரிழிவு கண் நோயை முன்கூட்டியே கண்டறிந்து பரிந்துரைக்க, மதுநேத்ரஏஐ (MadhuNetrAI) என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்துகிறது.
  • இது ஆயுதப்படை மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மின்-சுகாதார செயற்கை நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • இந்த முன்னோடித் திட்டம் புனே, மும்பை, பெங்களூரு, தர்மசாலா, கயா, ஜோர்ஹாட் மற்றும் கொச்சி ஆகிய ஏழு வெவ்வேறு இடங்களை உள்ளடக்கும்.
Next Current Affairs அறிவியல் >

People also Read