பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை NIOS-உடன் இணைப்பதற்கான முன்னோடித் திட்டம்
- பின்னணி : ஒன்றிய அரசு, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை, தொலைதூரக் கல்வி மூலம் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்துடன் இணைப்பதற்கான முன்னோடித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது.
- இந்த முயற்சி, இதற்கு முந்தைய தன்னிச்சையான சேர்க்கை முறையைத் தாண்டி, குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களைச் சேர்ப்பதற்கான ஒரு செயலூக்கமான முயற்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம்
- பள்ளியிலிருந்து பாதியில் நின்ற குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் கல்வியோடு இணைப்பது.
- NIOS மூலம் நெகிழ்வான தொலைதூரக் கல்வி வாய்ப்புகளை வழங்குவது.
- பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ள பதின்பருவத்தினருக்கு கல்வி கிடைப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது.
முன்னோடித் திட்டத்தின் பரவெல்லை
- இந்த முன்னோடித் திட்டம் ஒன்பது மாநிலங்களில் உள்ள 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அந்த மாநிலங்கள்:
- ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பீகார், உத்தரபிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி.
முக்கிய அம்சங்கள்
- 14-18 வயதுடைய பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை செயலி மூலம் வரைபடமாக்குதல்.
- கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல் அமைப்புகள்.
- சேர்க்கை மற்றும் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை வழிமுறைகள் .
- பல்வேறு துறைகளுக்கு இடையே மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு உத்திகள்.
முக்கியத் தரவுகள்
- சமீபத்திய காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி: இந்தியாவில் தற்போது 14-18 வயதுக்குட்பட்ட பிரிவில் இரண்டு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவி போட் “அபய்” CBI ஆல் தொடங்கப்பட்டது
- பின்னணி: மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தங்களால் வழங்கப்படும் அறிவிப்புகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, “அபய்” என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் உதவி போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியின் தேவை
- இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்புக்கு இணையவழி (Cyber) மோசடிகள் ஒரு கடுமையான சவாலாக உருவெடுத்து வருகின்றன.
- செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் போன்ற தொழில்நுட்பங்கள், மக்கள் உண்மையான தகவல்களையும் போலி அல்லது சிதைக்கப்பட்ட உள்ளடக்கங்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதை பெருகிய முறையில் கடினமாக்குகின்றன.
“அபய்” பற்றி
- “அபய்” என்பது சிபிஐ அறிவிப்புகள் உண்மையானவையா என்பதை குடிமக்கள் உறுதிப்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு AI-இயக்கப்பட்ட சாட்போட் அமைப்பாகும்.
- இது பின்வருவனவற்றை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது: இணைய மோசடி ,டிஜிட்டல் கைது மோசடிகள் மற்றும் சிபிஐ பெயரில் பரப்பப்படும் போலி அறிவிப்புகள்.
முக்கிய அம்சங்கள்
- பாதுகாப்பான மற்றும் பயனர்களுக்கு எளிமையான சரிபார்ப்பு பொறிமுறையை வழங்குகிறது.
- தரவு தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மைக்கான வலுவான பாதுகாப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதற்காக, பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய அங்கீகார அமைப்பை வழங்குகிறது.
சக்ஷம் திட்டம்
- பின்னணி: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), வெர்டிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து, உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், திறன் மேம்பாடு மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் ‘திட்டம் சக்ஷம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நோக்கம்:
- இந்த முயற்சியின் நோக்கங்கள்:
- கட்டமைக்கப்பட்ட தொழிற்பயிற்சியை வழங்குதல்.
- நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல்.
- கிராமப்புற பெண்களிடையே நிதி சுதந்திரம் மற்றும் சமூக அதிகாரமளித்தலை ஊக்குவித்தல்.
முக்கிய அம்சங்கள்
- சக்ஷம் திட்டம் பின்வருவனவற்றின் மூலம் செயல்படுகிறது:
- இந்தியா முழுவதும் அமைந்துள்ள 12 பயிற்சி மையங்கள்
- இது முக்கியமாக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மீது கவனம் செலுத்துகிறது.
கலாம் & கவச் 3.0
- பின்னணி: கலாம் & கவச் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு 2026, மே 14 அன்று தொடங்கி வைக்கப்படும்.
மாநாட்டின் நோக்கம்
- இம்மாநாடு பின்வரும் தலைப்புகள் குறித்த விவாதங்களுக்கான ஒரு முக்கிய மூலோபாய தளமாக செயல்படுகிறது:
- இந்தியாவின் பாதுகாப்புத்துறை உருமாற்றம்
- உள்நாட்டு பாதுகாப்புத் திறன்கள்
- எதிர்கால போர்க்கால தயாரிப்பு நிலை
- இது கொள்கை வகுப்பாளர்கள், இராணுவத் தலைவர்கள், தூதர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், புதிய தொழில்முனைவோர் (Start-ups), கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கல்வி வல்லுநர்களை ஒன்றிணைக்கிறது.
மையக் கருத்து
- இந்த நிகழ்வு கூட்டுத்தன்மை, தற்சார்பு, கண்டுபிடிப்பு, என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
- இது உள்நாட்டுமயமாக்கல், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது.
குறிக்கோள்கள்
- ஒருங்கிணைந்த இராணுவத் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல்.
- பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.
- தேசிய பாதுகாப்பு இலக்குகள் மற்றும் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகும் மூலோபாய கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல்.

