சேவை விருதுகள்
- சமூக நலத்துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், அலகுகளை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் குழந்தைகள் நலன் சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.
- விருதுகள் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்: நவம்பர் 27, 2025.
- 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் இதை அறிவித்திருந்தார்.
- இந்த ஆண்டுக்கான விருதுகள்
| பிரிவுகள் | மாவட்டங்கள் | இல்லங்களின் பெயர் |
| அரசு குழந்தைகள் இல்லங்கள் | தஞ்சாவூர் | அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லம் |
| தன்னரர்வத் தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் | தூத்துக்குடி | புனித மரியன்னை கருணை இல்லம் |
| சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் | சென்னை | அரசினர் கூர்நோக்கு இல்லம் |
| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு | ராமநாதபுரம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு |
- ஆகியவற்றுக்கு முதல்வர் விருதுகளை வழங்கியுள்ளார். பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கியுள்ளார்

