விருதுகள் மற்றும் கௌரவங்கள்

செவாலியே விருது

  • சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் 13.11.25 அன்று நடைபெற்ற நிகழ்வில் பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியே விருதை திரைத்துறை கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர்தியரி மாத்தோ வழங்கினார்.
  • கலைக்கும், திரைப்படத் துறைக்கும் கடந்த 64 ஆண்டுகளாக ஆற்றிய பணியைப் பாராட்டி தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருது அறிவிக்கப்பட்டது.
  • தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கு மிகவும் தத்ரூபமாக ‘செட்’ அமைத்தவர் தரணி. நாயகன், இந்தியன், ஜீன்ஸ், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் தோட்டா தரணி தனது கலை நுணுக்கங்களை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார். 
  • கலை, இலக்கியம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படும் ‘செவாலியே’ விருது, நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களுக்கு விருது

  • இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம். பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்களுக்கு விருதை அறிவித்துள்ளது.
  • இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
  • இந்தியாவின் பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த முதல் 10 நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். 
  • அசெஞ்சர் சொல்யூஷன்ஸ்,ஆக்ஸா எக்ஸ்.எல், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ், இஒய், கேபிஎம்ஜி, மாஸ்டர்கார்டு, ஆப் டம் குளோபல் சொல்யூஷன்ஸ், புராக்டர் அண்ட் கேம்பிள், டெக் மஹிந்திரா, விப்ரோ ஆகிய 10 நிறுவனங்களின் சார்பில் அவற்றில் பணிபுரியும் பெண்கள், அவதார் குழுமத்தின் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
Next Current Affairs விருதுகள் மற்றும் கௌரவங்கள் >